கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 


100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 பரிசுத்தொகை - அரசுப் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

 

தமிழக அரசுப் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: "உலகப் பொதுமறையாக உள்ள திருக்குறளில் இருக்கும் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நன்னெறி கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஏதுவாக இந்த நன்னெறிக் கல்வியை மாணவர்களுக்கு பள்ளிகளில் புகட்டுவதற்கு சில வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் நன்னெறி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறுவதை கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் நடக்கும் ஆண்டு ஆய்வுக் கூட்டங்களில் நன்னெறி கல்வியின் நீடித்த பயன் தரும் விளைவை விளக்கிட வேண்டும். திருக்குறளை நாள்தோறும் காலை வணக்கக் கூட்டத்தில் பொருளுடன் மாணவர்கள் கூற வேண்டும். மேலும், தமிழ் இலக்கிய மன்ற கூட்டங்களில் திருக்குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடிவினா ஆகியவற்றை திட்டமிட்டு பள்ளி அளவில் நடத்திட வேண்டும்.


இது தவிர, பள்ளி அளவில் 100 குறட்பாக்களுக்கு அதிகமாக ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து உரிய பரிசுத்தொகையான ரூ.200 வழங்கி பாராட்ட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. இதுமட்டுமின்றி திருக்குறள் வழியிலான வாழ்வியல் நெறிகளை பின்பற்ற உரிய வழிகாட்டுதல்களை பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வழங்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



சென்னை கனமழையில் ஓய்வின்றி பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...


 பலத்த கரகோஷங்கள் எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற தூய்மை பணியாளர்கள்.


சென்னை கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




சென்னையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி



முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி...


ஹரியானா முதலமைச்சராக 2ஆவது முறையாக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.


சண்டிகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.


ஹரியானாவின் 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது பாஜக.


யார் இந்த நியாப் சிங் சைனி? - குருஷேத்திராவின் எம்.பியாக இருக்கும் 54 வயதாகும் நயாப் சிங் சைனி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் ஹரியாணா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நயாப் சிங் சைனி தனது அரசியல் பயணத்தை கடந்த 1996-ம் ஆண்டு பாஜகவில் இருந்து தொடங்கினார். ஹரியாணாவின் நிர்வாக அமைப்பில் தொடங்கி படிப்படியாக முன்னேற்றமடைந்தார்.



2002-ம் ஆண்டு அம்பாலாவின் மாவட்ட பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக இருந்தார். பின்னர் 2005-ம் ஆண்டு மாவட்டத் தலைவரானார். கடந்த 2014-ம் ஆண்டு நாராயணகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்ட நயாப், 2016-ம் ஆண்டு ஹரியாணா அரசின் அமைச்சராவும் நியமிக்கப்பட்டார்.


கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குருஷேக்த்ரா தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பதிவு செய்தார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 3.83 லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்றார்.


மனோகர் லால் கட்டாரின் நெருங்கிய கூட்டாளியாக அறிப்படும் நயாப் சைனி, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2014-ம் ஆண்டில் இருந்து ஹரியாணா மாநில அரசியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவர் தனது இளமை காலத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி மோசடி வழக்கில் Neomax சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக - உயர்நீதிமன்றம்...



 நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக - உயர்நீதிமன்றம்...


ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அரசாணை வெளியிட ஆணை.


நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.


தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை.


தற்போது வரை எடுத்த நடவடிக்கை குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.


தூத்துக்குடியை சேர்ந்த ஜெயின் குமார், நடராஜன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதி முரளிசங்கர் ஆணை.


நியோமேக்ஸ் இயக்குநர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி வழக்கு.


மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின.


இந்த நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் சார்லஸ், இளையராஜாவிற்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘நியோமேக்ஸ் வழக்கில் என்னதான் நடக்கிறது?. இன்னும் எவ்வளவு கால தேவைப்படும்?. இந்த வழக்கு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?. எத்தனை பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்?. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.


சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு தாமதிக்க என்ன காரணம்? அரசாணை வெளியிடுவது தொடர்பாக இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. எனவே, அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து அதனை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும் அவர், “அரசாணை வெளியிட தவறும்பட்சத்தில் உள்துறை செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராக நேரிடும்” என்று கூறினார்.



பிரதமர் வீடுகள் கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு



பிரதமர் வீடுகள் கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு.


ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2024 - 2025 ஆம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை.


ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு.


மத்திய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு.


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பயன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.


இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் ஊரக பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.83 கோடி என மொத்தம் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.


ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% நிதி வழங்குகின்றன.


அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...



அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது - உயர்நீதிமன்றம்...


ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 


அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.


அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதனை அவர் மீற முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி உத்தரவு.


தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி  தாக்கல் செய்த மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு


கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.


அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனர். அதுவரை வீரபாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Thiruchendur Murugan Temple - Opening of Yatri Niwas - Room Booking Procedure...



 திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு - அறைகளை முன்பதிவு செய்யும் முறை...


Thiruchendur Murugan Temple Opening of Devotees Hostel - Room Booking Procedure...


திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு.. ரூம்களை எப்படி புக்கிங் செய்வது ?


புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்:


இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்


• குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms),


• 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks),


• ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),


• சமையல் அறையுடன் கூடிய உணவகம்,


• ஓட்டுநர்கள் ஓய்வு அறை,


• வாகனங்கள் நிறுத்துமிடம்,


• மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.



*கட்டணம் எவ்வளவு தெரியுமா.?*


திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.


2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய  டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


முன்பதிவு செய்வது எப்படி.?


திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள்  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின்  அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UGC NET exam results - The National Test Agency has released

 யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை UGC NET exam results - The National Test Agency has released