கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS technical Issues fixed

 

 

சரி செய்யப்பட்டுள்ள EMIS தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த தகவல்கள்


EMIS technical Issues fixed :

1. Able to enter BSNL number. 

2. OTC file upload issue has been fixed. 

3. Loading issue in the home page has been fixed. 


All the queries in the group related to technical difficulties have been addressed for the day. 


 Thank you.


21-12-2024 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-12-2024 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: சூது

குறள் எண் :940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.


பொருள்:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் குதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருத்த வருந்த உயிர் மேன் மேலும் காதல் உடையதாகும்.


பழமொழி :
Justice delayed is justice denied

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்


இரண்டொழுக்க பண்புகள் : 

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :

கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன - அரிஸ்டாட்டில்


பொது அறிவு :

1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகலிடம் பெற்ற இடம் எது?

விடை: பத்தமடை.

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி.


English words & meanings :

Reading       -       வாசித்தல்

Sewing        -       தையல்


டிசம்பர் 21

ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 21, 1972) அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், முன்னாள் முதல்வரும் ஆவார்.இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.


நீதிக்கதை

பேராசை

முன்னொரு காலத்தில் ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். அவர்கள் போகும் வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்கக் காசுகள் இருந்தன.

“ஆஹா! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி! எனக்கு இவ்வளவு தங்க காசுகள் கிடைத்திருக்கு!”

என்று ரொம்ப பெருமையாக ராமுவிடம் சோமு சொன்னார். அப்போது ராமு சொன்னார் “நீ மட்டும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதே,  நாம் இரண்டு பேரும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்" என்றார்.

“அது எப்படி முடியும் நான் தான் இந்த பையை முதலில் பார்த்தேன். அதனால் எல்லா தங்கமும் எனக்குத் தான். அப்புறம் அதிர்ஷ்டமும் எனக்குத் தான். உனக்கு இல்லை” என்று கூறினார் சோமு.

சோமு சொன்னதைக் கேட்ட ராமு எதுவும் பேசவில்லை. தேவை இல்லாமல் சண்டை போடக்கூடாது என்று நினைத்தார் ராமு. அந்த சமயத்தில் யாரோ பின்னாடி இருந்து திருடன், திருடன் என்று கத்தினார்கள். அப்போது அவர்கள் திரும்பி பார்க்கும் போது, கையில் கம்போடு சிலர் தங்களை நோக்கி ஓடிவருவதை பார்க்கிறார்கள்.

அப்போது சோமு சொன்னார் “ஐயோ! கடவுளே! இப்போது நம்மை இவர்கள் தங்கத்தோடு பார்த்தால் நாம் மாட்டிக்கொள்வோம், ரொம்ப அடிப்பார்கள் ” என்று கவலையோடு சொன்னார்.

அதுற்கு ராமு சொன்னார் “நாம் இல்லை. நீதான் மாட்டுவாய், உன்னை தான் பயங்கரமா அடிப்பாங்க. நீ சொன்னபடி, அந்த தங்கம் உனக்கு மட்டும் தான் சொந்தம் என்றாய் அல்லவா, இப்போ அவங்க தர போகும் அடியும் உனக்கு மட்டுமே சொந்தம்” என்றார்.

நாம் நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் நமது கெட்ட நேரத்தில் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று யோசிப்பது முட்டாள்தனம்.


இன்றைய செய்திகள்

21.12.2024

* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

* சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்​சி​யில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்​கிறது: மத்திய அரசு பாராட்டு.

* மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

* நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்: நாசா புதிய தகவல்.

* பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி.

* பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; 26-ந்தேதி தொடக்கம்.


Today's Headlines

* Speaker Appavu has announced that the Tamil Nadu Legislative Assembly session will begin on January 6 with the Governor's address.

* Tamil Nadu is a pioneer state in Siddha medical education and research: Central government praises.

* The Social Welfare Department has ordered the appointment of 8,997 cooking assistants in nutrition centers, each with a monthly salary of Rs. 3 thousand.

* The Central government has ordered the state governments to expedite the work of providing piped drinking water connections across the country.

* Sunita Williams will return to Earth only in March: NASA new information.

* FIFA Intercontinental Football Cup: Spain's Real Madrid team won the championship.

* The Junior Super Kings cricket series between schools; starts on the 26th.


Covai women ICT_போதிமரம்


Rabid dog attack in school - Student, child injured due to dog bite



 பள்ளியில் புகுந்து வெறிநாய் அட்டகாசம் - கடித்ததால் மாணவர், குழந்தை காயம்


Rabid dog bite school Student and child 



How to upload Internet Connection details in EMIS website?

 

EMIS இணையதளத்தில் இணைய இணைப்பு விவரங்களை எவ்வாறு பதிவேற்றுவது?


How to upload Internet Connection details in EMIS website?




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Dates for Ennum Ezhuthum Term 3 Training - SCERT Director's Proceedings

 

எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் 3 மாவட்டங்களில் எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி நடைபெறும் நாட்கள் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்



Dates for Ennum Ezhuthum Term 3 Training in Districts where Exams Postponed Due to Heavy Rain - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிற மாவட்டஙகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள்


மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள் : 13-11-2024


Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings Rc.No: 2411/ F2/ 2021, Dated : 13-11-2024


 1-3 வகுப்புகள்:


☀️ 25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)


☀️ 09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)


☀️ 06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)



 4-5 வகுப்புகள்


☀️ 27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)


☀️ 11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)


☀️ 08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்)



>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Rescheduled Term 2 Exam Time Table - DEE Proceedings

 


மழையின் காரணமாக இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2024-2025 ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2024


Examination Time Table for Districts where Second Term Examination Postponed Due to Rain - Proceedings of Director of Elementary Education, Dated : 20-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


20-12-2024 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-12-2024 - School Morning Prayer Activities



திருக்குறள்:

"பால் : பொருட்பால்

அதிகாரம்: சூது

குறள் எண்:939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.

பொருள் :
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்."


பழமொழி :
Early sow, early now.

பருவத்தே பயிர் செய்


இரண்டொழுக்க பண்புகள் : 

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :

கடப்பதற்கு தடைகளும்,  தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகி விடும் -- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. மனித உடலில் எடை குறைவான உடல் உறுப்பு எது?

விடை : நுரையீரல்.             

2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?

விடை: கால்சியம்


English words & meanings :

Meditation      -      தியானம்

Painting.    -     வண்ணம் தீட்டுதல்


நீதிக்கதை

எறும்புகளின் ஒற்றுமை

அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மரத்தின் ஓட்டைக்குள்ளே பாம்பு ஒன்று வசித்து வந்தது. அந்த பாம்பு தவளைகளையும், வாத்து, பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடும்.

பகல் முழுக்க தூங்கி இரவில் சரியான நேரத்தில் வேட்டையாடும்.சில நாட்களுக்கு அப்புறம் பாம்பு பெருதாக வளர்ந்தது.அதனால அந்த மரத்தின் ஓட்டைக்குள்  போக முடியவில்லை.

அதனால ஒரு புது வீட்டுக்கு மாற யோசித்தது. புது வீடு தேடும்பொழுது ஆலமரத்தில் ஒரு பெரிய ஓட்டை இருப்பதை பார்த்தது.

ஆனால் அந்த மரத்துக்கு கீழே எறும்பு புற்று ஒன்று இருந்தது. பாம்பு அந்த ஆலமரத்துக்கு பக்கத்தில் வந்து “இனிமேல் நான் இந்த மரத்தில்தான் இருப்பேன். நீங்க எல்லோரும் உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்கள் ” என்று சொன்னது.

அங்கு இருந்த எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப பயந்து போய்விட்டன. ஆனால் எறும்புகள் மட்டும் பயப்படவில்லை. அது அந்த எறும்புகளின் ஒற்றுமையால்  கட்டப்பட்ட புற்று.

அதனால் எல்லா எறும்புகளும் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் முன்னேறி பாம்பை சுற்றி நின்று  தாக்க

ஆரம்பித்தார்கள். எறும்பு கடியால் எற்பட்ட தாங்க முடியாத வலியால் பாம்பு அந்த இடத்தை விட்டு ஓடிப் போனது.

பிறகு,அந்த இடத்துக்கு வரவே இல்லை. அன்றிலிருந்து எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

நீதி: ஒற்றுமையே பலம்.


இன்றைய செய்திகள்

19.12.2024

* வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன் தகவல்.

* புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.

* சர்வதேச தரவரிசை பட்டியல்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

* உலகின் சிறந்த கால்பந்து வீரராக  பிரேசில் வீரர் வினிசியஸ் தேர்வு.


Today's Headlines

* The National Energy Conservation Award has been given to Chennai ICF for making energy saving a special feature in the production of Vande Bharat trains.

* The National Green Tribunal has ordered the Tamil Nadu Pollution Control Board to recover the cost of removing medical waste dumped in Tamil Nadu from the Kerala Pollution Control Board.

* Vijay Mallya's assets were sold and Rs. 14,000 crore was given to banks: Nirmala Sitharaman.

* Russia has announced that it has developed a vaccine for cancer. It is reported that this vaccine, which is unknown in the market early next year, will be available free of cost.

* International rankings: Indian player P.V. Sindhu has moved up one place to 15th in the women's singles category.

* Brazilian player Vinicius has been selected as the best footballer in the world.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...