கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

குறள் எண்:956

அதிகாரம்: குடிமை

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்:
நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.


பழமொழி :
சூரியன் எழு முன் காரியம் ஆடு.  

Form your plans before sunrise.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல -- ஹென்றி போர்ட்


பொது அறிவு :

1. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

பஞ்சாப்.

2.குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?
21 நாட்கள்.


English words & meanings :

Cave.   -     குகை

Coast.    -   கடற்கரை


ஜனவரி 27

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day)

 
நீதிக்கதை

விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தார். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார் .

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றார்  நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடுசெய்வதாகக் கூறினார்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் "தனக்கு திராட்சை  தோட்டம்வேண்டும்" என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னார் .

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்றுகேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றார் .

அவன்  வெளியே வந்தவுடன், தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலைமதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்றுஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார்.இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவர்  கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறார். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்குததான் இந்த வேலைகளைக்கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின்முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர்  கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது.

ஆனால் நான் கேட்ட பரிசோஇப்போது என் கையில்"இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி:அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய், பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.


இன்றைய செய்திகள்

27.01.2025

* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  

* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines

* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.

* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.

* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.

* The US government has decided to suspend funding for global aid programs.

* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship.


Covai women ICT_போதிமரம்


3rd & 5th Standard Students Learning Survey Schools & students name across tamilnadu

 


 தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு கற்றல் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர் - மாவட்ட வாரியாக 


3rd & 5th class Students Learning Survey Schools & students name across tamilnadu


Dear team,


மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் 3 & 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும். 


▪மதிப்பீடு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link மற்றும் SOP document ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியருக்கு  WhatsApp  மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. 


▪தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் பள்ளிகளுக்கு DC மூலமாக தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


▪இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல், மாணவர்களின் பட்டியல், மதிப்பீடு நடத்தப்பட வேண்டிய schedule இணைக்கப்பட்டுள்ளது. 


இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



>>> Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்களின் பெயர்ப் பட்டியல்...



>>> கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... 


Term 3 - January 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

 

4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி 4வது வாரம் (Term 3 - January 4th Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)


>>> 4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 2 (Term 3 - Unit 2 - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Term 3 - Unit 3 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard

 

 

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 (Term 3 - Unit 3 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 (Term 3 - Unit 3 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Faith - Today's Short Story

 

நம்பிக்கை - இன்று ஒரு சிறு கதை - இன்றைய சிறுகதை 


Faith - Today's Short Story 


இந்த உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார் அலெக்சாண்டர். ஒரு கட்டத்தில் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான வியாதி வந்துவிட்டது.


அவர் கூடவே வந்திருந்த கிரேக்க வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. அது எந்த வகையான நோய் என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.


ஏனென்றால் இது அந்தப் பகுதியிலேயே இருப்பவர்களுக்கு வரக்கூடிய ஒரு வினோதமான நோய் ஆகையால் அந்த கிரேக்க வைத்தியர்களால் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை.


அலெக்சாண்டர் இருப்பதோ எதிரியினுடைய இடம். பாரசீக மன்னருடைய ஆளுகைக்கு உட்பட்ட இடம் அது. இந்த வியாதியை குணப்படுத்த என்ன செய்வது என்று அனைவரும் யோசனை செய்து செய்து கொண்டிருந்தனர்.


பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்து மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர், இருந்தாலும் எதிரி நாட்டுடைய வைத்தியரை அழைத்து எப்படி வைத்தியம் செய்வது என்று அங்கிருந்து அனைவரும் தயங்கினர். ஆனால் அலெக்சாண்டரோ அவரை வரவழைத்து வைத்தியம் பார்ப்பது என்று முடிவு செய்தார்.


முடிவு செய்தது மாதிரியே அரண்மனை வைத்தியரையும் அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார். அரண்மனைவைத்தியர் வந்து அலெக்சாண்டரை பரிசோதனை செய்துவிட்டு அலெக்சாண்டருக்கு வந்திருப்பது என்ன வகையான நோய் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்.


இந்த நோயை குணப்படுத்தி விடலாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அதற்கு ஒரு மூலிகை ரசம் தயாரித்து கொண்டு வர வேண்டும், இன்று முடியாது நாளை மூலிகை ரசம் தயாரித்துக் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


சொன்னது மாதிரியே ரசம் தயாரித்து மறுநாள் கொண்டு வந்து விட்டார். இதற்கு இடையில் அலெக்சாண்டர் உடைய தளபதிகளில் ஒருவர் ரகசியமாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கொடுத்து அனுப்பி இருந்தார். அதில் அந்த வைத்தியர் கொண்டுவரும் மருந்தில் விஷம் இருப்பதாகவும், அந்த மருந்தை அருந்த வேண்டாம், என்றும் அதில் எழுதி இருந்தது.


இதை அலெக்சாண்டர் பார்த்துவிட்டு எந்தவித சந்தேகமும் இன்றி வைத்தியர் கொடுத்த மூலிகை ரசத்தை கடகடவென்று குடித்துவிட்டார்.


அதன் பிறகு அந்த கடிதத்தில் இருந்த விஷயத்தை அந்த வைத்தியரிடம் கூறினார். அதைக் கேட்ட வைத்தியர் ஒரு நொடி திகைத்து நின்று விட்டார் தன்மீது அலெக்ஸாண்டர் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து அந்த வைத்தியருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.


வைத்தியர் கொடுத்தது என்னவோ சுத்தமான மூலிகைரசம் தான், அதில் விஷம் எதுவும் கலக்கவில்லை, அதன் பிறகு அந்த வைத்தியரை பார்த்து அலெக்சாண்டர் கூறினார், நம்பிக்கை என்ற அச்சாணியை வைத்துதான் இந்த உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, எனக்கு எதிரியாக இருந்தாலும் பாரசீக மன்னர் மிகவும் பெரியவர். அப்படிபட்டவர் அரண்மனையில் இருக்கும் அரண்மனை வைத்தியர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும், தொழில் நேர்மை இல்லாதவராக இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் அவரை அரண்மனை வைத்தியராக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் நான் வைத்தேன், என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதற்கு தகுந்தாற்போல் நீங்களும் நடந்து கொண்டீர்கள் என்று அலெக்சாண்டர் கூறினார் .



ஒருவர் மீது *நம்பிக்கை* வைத்தால் அது உண்மையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். 


🌹இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்🌹


SLAS Exam 2024-2025 - Portions & Assessment Design

 


மாநில அளவிலான அடைவுத் தேர்வு SLAS தேர்வு 2024-2025 - பாடப்பகுதிகள் & மதிப்பீட்டு வடிவமைப்பு


SLAS Exam 2024-2025 - Portions & Assessment Design 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Padma awards announced to 139 people



139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு


உள்துறை அமைச்சகம் 

செய்திக்குறிப்பு 


நார்த் பிளாக், புது தில்லி-1 

ஜனவரி 25, 2025 


 பத்ம விருதுகள் - நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று, வழங்கப்படுகிறது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகள். விருதுகள் பல்வேறு துறைகளில் / செயல்பாடுகளின் துறைகளில் வழங்கப்படுகின்றன, அதாவது கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை, முதலியன. 'பத்ம விபூஷன்' விதிவிலக்கான மற்றும் சிறப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது; ‘பத்மா உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக பூஷன்' மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக 'பத்ம ஸ்ரீ' எந்த துறையில். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. 

2. இந்த விருதுகள் இந்திய குடியரசுத் தலைவரால் சடங்கு நிகழ்ச்சிகளில் வழங்கப்படுகின்றன பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் / ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும். 2025 ஆம் ஆண்டிற்கு, 1 இரட்டையர் வழக்கு உட்பட 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் கீழேயுள்ள பட்டியலின்படி, விருது ஒன்றாகக் கணக்கிடப்படுகிறது. இப்பட்டியலில் 7 பத்ம விபூஷன் விருதுகள் இடம்பெற்றுள்ளன. 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள். விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் மற்றும் பட்டியல் வெளிநாட்டினர் / NRI / PIO / OCI மற்றும் 13 மரணத்திற்குப் பிந்தைய வகையைச் சேர்ந்த 10 நபர்களும் அடங்குவர். விருது பெற்றவர்கள்.


MINISTRY OF HOME AFFAIRS

PRESS NOTE


North Block, New Delhi-1

Dated the 25th January, 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in various disciplines / fields of activities, viz.- art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. ‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year.

2. These Awards are conferred by the President of India at ceremonial functions which are held at Rashtrapati Bhawan usually around March / April every year. For the year 2025,the President has approved conferment of 139 Padma Awards including 1 duo case (in a duo case, the Award is counted as one) as per list below. The list comprises 7 Padma Vibhushan, 19 Padma Bhushan and 113 Padma Shri Awards. 23 of the awardees are women and the list also includes 10 persons from the category of Foreigners / NRI / PIO / OCI and 13 Posthumous awardees.


🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


🏅 பத்ம விபூஷன் - 7,  பத்ம பூஷன்  - 19, பத்ம ஸ்ரீ  -113 பேருக்கு அறிவிப்பு.


🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன்


🏅 நல்லி குப்புசாமி - பத்ம பூஷன்


🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன்


🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ


🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ


🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ


🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ


🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ


🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ


🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ


 🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ


🏅 வைத்தியநாதன் - பத்ம ஸ்ரீ


🏅 வேலு ஆசான் - பத்ம ஸ்ரீ



>>> முழுமையான பெயர்ப் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...