கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.03.2021 (சனி)...

 


🌹வேண்டியவர்களுக்கு  கூட வேண்டாதவர்களாய் மாறிவிடுகிறோம்.

அவர்களுக்கு வேண்டியதை செய்ய இயலாத சூழ்நிலையில்.!

🌹🌹காயங்கள் உருவாக கத்திகள் தேவையில்லை.

புரிதலற்ற வார்த்தைகளே போதும் வலிக்க வலிக்க நின்று கொல்லும்.!!

🌹🌹🌹ஏதோ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடையும் போது தான் இனி எதுவுமே தேவையில்லை என்ற நிலைக்கு வந்து விடுகிறது மனித மனம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகளுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம். நா.சண்முகநாதன் வலியுறுத்தல்.                                                 

🍒🍒புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆளுநர் அறிவிப்பு.

👉புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் மே 31 வரை விடுமுறை விடப்படுவதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.

👉அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.

🍒🍒மருத்துவ காரணங்களால் தேர்தல் பணி செய்ய இயலாது என்று பரிந்துரைக்கப்படும் அலுவலர்களின் பெயர்கள் கட்டாய பணி ஓய்வுக்கு பரிந்துரை - புதுச்சேரி அரசு அதிரடி

🍒🍒கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை -ஆனால் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

🍒🍒அரசு பள்ளிகளில் கணினி பாடம் சார்ந்த கோரிக்கை தேர்தல் அறிக்கையில் இடம்பெற! 60000 கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

🍒🍒தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டது என நிபுணர்கள் தெரிவிப்பு

🍒🍒கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு.

🍒🍒"பொதுமக்களிடம் போதிய விழிப்பில்லாத காரணத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கிறது"

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம்.

🍒🍒சிபிஎஸ்இ பாட திட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி உள்ளிட்ட பெண் விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இடம் பெற செய்ய வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து திமுக எம்.பி., திருச்சி சிவா கோரிக்கை.

🍒🍒நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே அறிவித்துள்ளார்.

🍒🍒இந்தியாவில் அதிகளவு படித்து முன்னேறும் மாநிலம் தமிழகம் தான், அதை தடுத்து நிறுத்தும் முயற்சி தான் புதிய கல்வி கொள்கையும் நுழைவு தேர்வுகளும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒தேர்தலை தாமதமாக வந்திருந்தால் மக்களின் மளிகை கடனை கூட முதல்வர் ரத்து செய்திருப்பார் போல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

👉25 தொகுதிகள் ஒதுக்கியதால் வருத்தம் இல்லை, திமுக ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவோம் என் அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது என மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 10.9% ஆக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா? வெற்றி எங்கு உள்ளது? என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என குழப்பமான துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான் என அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒மேற்குவங்க மக்களுக்கு துரியோதனனும், துச்சாதனனும் தேவையில்லை என்று அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

🍒🍒அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

🍒🍒சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறேன் என்று த.மா.கா பொதுச் செயலாளர் ஞானசேகரன் அறிவித்துள்ளார்.

த.மா.கா சார்பில் திரு.வி.க. நகர், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன் கொடுக்கவில்லை,  த.மா.கா எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய பொதுச் செயலாளர் ஞானசேகரன், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

🍒🍒தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு

👉கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது

👉இதுவரை 4,544 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

👉வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

👉வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசிநாள்

👉22ம் தேதி பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

🍒🍒2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அறிவிப்பு                                                 

🍒🍒தமிழகம் முழுவதும் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்து தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

🍒🍒அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். 

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தனது பயணத்தின் போது சந்திக்க உள்ளார்.

🍒🍒டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் 'மிகவும் மோசமான' வகைக்குச் செல்கிறது. 

காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி முறைப்படி, காற்றின் தரக் குறியீடு 311 ஆக உள்ளது.

🍒🍒தற்போது, ​​மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. ஆனால் மின்சார வாகனங்களின் விலை - பெட்ரோல் & டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்களின் விலை இரண்டு ஆண்டுகளுக்குள் சமமாக இருக்கும் என்று நம்புகிறேன். 

-மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி.

🍒🍒ஜமைக்காவிற்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பிய இந்தியாவுக்கு ஜமைக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்தார்.

🍒🍒அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு ஸ்டாலின்தான் தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார் -  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

🍒🍒தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர்  தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் - தேர்தல் ஆணையம்

49 ஆயிரத்து 114 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

🍒🍒மக்கள் கேண்டின் அமைக்கப்படும் 

மக்கள் கேண்டின் என்பது அம்மா உணவகம் போல் இல்லை. 

நியாயமான விலையில் மக்களுக்கு பொருள் கிடைக்கச்செய்வது.

-கமல்ஹாசன்

🍒🍒கொரோனா தொற்று அதிகரிக்க பள்ளிகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு எடுத்துரைத்திருக்கிறோம்.

- சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

🍒🍒அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்

🍒🍒குடும்பன், பண்ணாடி , கடையன் உள்ளிட்ட 7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

🍒🍒பினாயில் விலை 20ரூ

ஆனால் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 130ரூபாய்க்கு பில் போட்டு வாங்கி இருக்கார் 

-திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்.

🍒🍒 தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு - தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

🍒🍒வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 115வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

🍒🍒மீண்டும் ஊரடங்கு என்று வதந்தி பரப்பினால் காவல்துறை மூலம் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.

🍒🍒பழைய வாகன அழிப்பு சான்றிதழை சமா்ப்பித்தால் புதிய வாகன விலையில் 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் - மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

🍒🍒கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க முழு கவச உடை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு - வாக்குச்சாவடிகளுக்கு சானிடைசர், கையுறைகளை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை.

🍒🍒ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - வருகிற ஆகஸ்ட் மாதம் தான் விசாரணை நடைபெறும் என்றும் அறிவிப்பு.

🍒🍒கேரளாவில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமென கர்நாடக அரசு அறிவிப்பு பெருந்தொற்று பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை

🍒🍒சீனாவில் பணியாற்றும் வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

🍒🍒அதிபா் விளாதிமீா் புதினை 'கொலையாளி' என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளதற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

🍒🍒தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று வட கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

🍒🍒தமிழகத்தைச் சோந்த வேகப்பந்துவீச்சாளரான நடராஜன் உடற்தகுதித் தோவில் தோச்சி அடைந்ததை அடுத்து, இந்திய அணியில் வியாழன் இணைந்தாா்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...