கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 01, 2021



செயல்பாடுகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடும். வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : நிதானத்துடன் செயல்படவும்.


பரணி : பொறுமை வேண்டும்.


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 01, 2021



நண்பர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.


மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 01, 2021



மனதில் மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் வருகையால் லாபகரமான சூழல் அமையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


திருவாதிரை : லாபகரமான நாள்.


புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 01, 2021



கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் பழைய சரக்குகளால் லாபம் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். உயர் பதவியில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : வாக்குவாதங்கள் மறையும்.


பூசம் : கவனம் வேண்டும்.


ஆயில்யம் : ஆசைகள் தோன்றும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 01, 2021



திரவியம் சம்பந்தமான தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனைவி வழி உறவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : சாதகமான நாள்.


பூரம் : மேன்மை உண்டாகும்.


உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 01, 2021



பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். புதிய தொழில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : புகழ் உண்டாகும்.


சித்திரை : முயற்சிகள் அதிகரிக்கும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 01, 2021



தொழிலில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : இடர்பாடுகள் குறையும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும். 

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 01, 2021



தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது சிறப்பு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணிய முயற்சியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 01, 2021



எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் பேசவும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணங்கள் தெளிவு பெறும். வாகன வசதிகள் மேம்படும் .



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூராடம் : கனிவு வேண்டும்.


உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 01, 2021



நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.


திருவோணம் : விவேகம் வேண்டும்.


அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 01, 2021



மனதில் எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


சதயம் : புதுமையான நாள்.


பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 01, 2021



பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். புண்ணிய காரியங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பலரின் ஆதரவு கிடைக்கும்.

எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns