கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (10-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 10, 2021



நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : தெளிவு கிடைக்கும்.


பரணி : சேமிப்புகள் குறையும். 


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 10, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : கலகலப்பான நாள். 


ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 10, 2021



தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார சிக்கல்கள் குறையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களிடம் கலந்து ஆலோசிப்பது மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 10, 2021



உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின் போது விவேகம் அவசியமாகும். போட்டித்தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


பூசம் : தனவரவுகள் மேம்படும்.


ஆயில்யம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 10, 2021



வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மேலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : பொருளாதாரம் மேம்படும். 

---------------------------------------




கன்னி

ஜூலை 10, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சித்திரை : மாற்றமான நாள். 

---------------------------------------




துலாம்

ஜூலை 10, 2021



முக்கியமான கோப்புகள் மற்றும் பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : முன்னேற்றமான நாள். 


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 10, 2021



சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அனுஷம் : விவேகம் வேண்டும்.


கேட்டை : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 10, 2021



புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : அலைச்சல்கள் ஏற்படும். 


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 10, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : மேன்மை உண்டாகும். 


அவிட்டம் : புதுமையான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 10, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


சதயம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 10, 2021



உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.


உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


ரேவதி : கவனம் வேண்டும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...