கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நிலை) எண் : 235, நாள்:31-10-2026 வெளியீடு



Dearness Allowance (DA) increased to 63% – Government Order (Ms.) No. 235, dated 31-10-2026, issued.


அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நிலை) எண் : 235, நாள்:31-10-2026 வெளியீடு


G.O. (Ms.) No. 235, Dated 31-10-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு 2026


கையெழுத்துத் தொடர்


நிதி (படிகள்) துறை 


அரசாணை (நிலை) எண். 235, நாள்:31-10-2026.


(ஐப்பசி -14, திருவள்ளுவர் ஆண்டு 2057)


சுருக்கம்


படிகள் அகவிலைப்படி 01-07-2026 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


பின்வருவனவற்றைப் படிக்கவும்:-


ஆணை


அரசாணை (நிலை) எண்.97. நிதி (படிகள்) துறை, நாள்.14-05-2026


மேலே படிக்கப்பட்டுள்ள அரசாணையில் கீழே குறிப்பிட்டுள்ளபடி, மாநில அரசு அலுவலர்களுக்கு திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது..


எந்தாளிலிருந்து வழங்கப்படுகிறது

01-01-2026


திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம் (மாதம் ஒன்றுக்கு)

அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதம்


2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,மாநில அரசுப் பணியாளர்களுக்கு 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அகவிலைப்படியை 01-07-2026 முதல் உயர்த்தி வழங்கப்படும் அறிவித்ததன் அடிப்படையில் 3 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி, அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.


எந்நாளிலிருந்து வழங்கத்தக்கது

01-07-2026


திருத்தியமைக்கப்பட்ட அகவிலைப்படி வீதம் (மாதம் ஒன்றுக்கு)

அடிப்படை ஊதியத்தில் 63 சதவீதம்


3. ஜுலை 2026 முதல் அக்டோபர் 2026 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லாப் பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருத்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.


4. மேலே அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப் பணியாளர்களுக்கும். சில்வறைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி. பகுதி நேரப் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.


5. இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும். ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் /உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும். ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் / எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருத்தும்.


6. இச்செலவு, சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்பின் பெருத்தலைப்பு, துணைப் பெருத்தலைப்பு, சிறு தலைப்பின் கீழ்வரும் 303. அகவிலைப்படி" என்ற நுணுக்கத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.


7. மேலே பத்தி 2-இல் ஒப்பளிக்கப்பட்ட திருத்திய அகவிலைப்படி அடிப்படையில், ஜூலை 2026 முதல் அக்டோபர் 2026 வரையிலான நிலுவைத் தொகைப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கவும். நிலுவைத் தொகையை தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட இயக்குநர். கருவூலக் கணக்குத் துறை, சென்னை கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


8. இதற்கான பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குமாறு கருவூல அலுவலர்கள் / சம்பளக் கணக்கு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


(ஆளுநரின் ஆணைப்படி)

மு.அ.சித்திக்

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்


பெறுநர்


அனைத்துத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதன்மைச் செயலாளர்/செயலாளர் சென்னை-9


செயலாளர் சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9.


காப்பாளர் ஆளுநர் மாளிகை சென்னை-22.


ஆளுநரின் முதன்மைச் செயலாளர் மக்கள் மாளிகை சென்னை-22 ஆளுநர் செயலகம், மக்கள் மாளிகை, சென்னை-22


தலைமை தணிக்கை இயக்குநர் (மு.கூ பொ). பேராசியர் க.அன்பழகன் மாளிகை. சென்னை-35


அனைத்து துறைத் தலைவர்கள். அனைத்துச் செயலகத் துறைகள் (அலுவலக நடைமுறை மற்றும் பட்டியங் பிரிவுகள்)


மாநிலத் தகவல் ஆணையம். தேனாம்பேட்டை சென்னை-18. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்


அனைத்து மாவட்ட மாஜிஸ்டிரேட்கள் நீதிபதிகள்/அனைத்து முதன்மை நீதித்துறை


முதன்மை மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (கணக்குகள் மற்றும் உரிமைத் தொகை) சென்னை-18.


மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை-1) சென்னை-18. சென்னை-18 மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை


மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் (உதபி), சென்னை-மதுரை இயக்குநர்கருவூலக் கணக்குத் துறை, சென்னை-35


அனைத்து சம்பளக் கணக்கு அலுவலர்கள்.


அனைத்து கருவூல அலுவலர்கள்/அனைத்து சார் கருவூய அலுவலர்கள் தலைவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3


ஆணையாளர். ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயம். சென்னை-108 பதிவாளர்.உயர்நீதி மன்றம், சென்னை-104 அனைத்து அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பதிவாளர்கள்.


அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்கள் / சட்டப்படியான வாரியங்கள். ஆணையாளர். பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை-3.


அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள் மதுரை / கோயம்பத்தூர் / திருச்சிராப்பள்ளி சேலம் / திருநெல்வேலி / ஈரோடு / திருப்பூர் / தூத்துக்குடி / வேலூர்  / தஞ்சாவூர் / கும்பகோணம் / திண்டுக்க / நாகர்கோயில் / ஒசூர் /காஞ்சிபுரம் / கரூர் / கடலூர் / சிவகாசி / தாம்பரம்/ காரைக்குடி / நாமக்கல்


புதுக்கோட்டை / திருவண்ணாமலை மாநகராட்சி ஊரக வளர்ச்சித் துறை அனைத்து உதவி இயக்குநர்கள் / அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்


அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் / அனைத்து கோட்டாட்சியர்கள் / அனைத்து வட்டாட்சியர்கள்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், இயக்குநர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேல்பாட்டு சேவைகள், தரமணி, சென்னை-113


நகல்


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/செயலாளர்-சென்னை


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் சென்னை-9.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் சென்னை-9. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கூடுதல் செயலாளர் சென்னை-9.


அரசு தலைமைச் செயலாளரின் முதன்மை தனிச் செயலர் சென்னை-9. அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளரின் முதுநிலை முதன்மை தனிச் செய்வர்.


நிதித்துறை, சென்னை-9. இருப்புக்கோப்பு/ உபரி நகல்கள்


-/ஆணைப்படி அனுப்பப்படுகிறது /-


பிரிவு அலுவலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நிலை) எண் : 235, நாள்:31-10-2026 வெளியீடு

Dearness Allowance (DA) increased to 63% – Government Order (Ms.) No. 235, dated 31-10-2026, issued. அகவிலைப்படி 63% ஆக உயர்வு - அரசாணை (நில...