கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...



 25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools -  from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...


தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் அறிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறும்போது “நாளை மறுநாள் முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...