கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - ரிஷபம் (Guru Peyarchi Palangal - Risabam)...

 


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - ரிஷபம் (Guru Peyarchi Palangal - Risabam)...



ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!


கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சளைக்காமல் பயணிப்பவர்களே, ஓயாத உழைப்பால் சாதனைப் பட்டியலில் இடம்பிடிப்பவர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலும், 10-ம் வீட்டிலும் கொஞ்சம் காலம் இருந்து படாதபாடு படுத்தியும், ஓரளவு பணவரவையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை லாப வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்து பலன் தரப் போகிறார். இனி பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திட்டமிட்ட எந்த வேலையையும் தடையில்லாமல் முடிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். தொல்லை தந்த அதிக வட்டிக்கடனை பைசல் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.




வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். அலைச்சல் ஒருபுறம் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை இல்லையே என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.




தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். புதுத் தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக் கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். உங்களின் வெளிப்படையான பேச்சால் தடைபட்ட சில வேலைகள் விரைந்து முடியும். அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:




14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வீண் செலவு, மனக்கவலை, ஏமாற்றம், அலைச்சல், திடீர் பயணங்கள், சகோதரருடன் மனத்தாங்கல், சிறு சிறுவிபத்துகள் என வரக் கூடும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம்.




30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். திருமணம், கிரகப்பிரவேசம் சிறப்பாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து சேரும். உடல் ஆரோக்யம் மேம்படும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள்.




24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்கால கட்டத்தில் குருபகவான் உங்கள் தன, பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம், உத்யோகம் திருப்திகரமாக அமையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பரத்தால் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.




புதுப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி - இறக்குமதி, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வசூலாகும். உத்யோகஸ்தர்களே, உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிப்பீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதுடன், வருங்கால நிம்மதிக்கான வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.




பரிகாரம்: திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.




குருப்பெயர்ச்சி பலன் - ரிஷபம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை



குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து


ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும்..


ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும்..


ஒன்பதாம் பார்வையின் மூலமாக களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே!!

வருகின்ற குருபெயர்ச்சியில் குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் 'குரு பார்வை கோடி புண்ணியம்' என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் :


கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். குலதெய்வம் மற்றும் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக எண்ணங்களும், வாய்ப்புகளும் கைகூடும். பத்திரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாகப்பிரிவினை விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். காதில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் மேம்படும். உங்களை பற்றிய மற்றவர்களின் கண்ணோட்டங்களில் மாற்றங்கள் காணப்படும். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

பொருளாதாரம் :


பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரம் மற்றும் அழகு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உருவாகும்.

விவசாயிகளுக்கு : 


விவசாய பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வாகனம் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் குறிப்புகள் மூலம் விளைச்சலை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு : 


குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும், முயற்சிகளும் கைகூடும். புதுவிதமான காதணிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 


உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோக பணிகளில் உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும்.

மாணவர்களுக்கு : 


மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கதை மற்றும் கட்டுரைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முயற்சிக்கேற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வியில் தகுந்த ஆலோசனைகள் மூலம் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு : 


சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளின் தொடர்புகள் ஏற்படும்.

கலைஞர்களுக்கு : 


கலைஞர்கள் மீது இருந்த வதந்திகள் நீங்கி நம்பிக்கை மேம்படும். உடனிருந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் மறைமுக ஆதரவு ஏற்படும்.

வியாபாரிகளுக்கு : 


புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். 

நன்மைகள் :


இந்த குருபெயர்ச்சியின் மூலம் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமும், புதுவிதமான சிந்தனைகளும், சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும் கைகூடும்.

கவனம் :


இந்த குருபெயர்ச்சியின் மூலம் எதிர்பாராத சில தகவல்களால் விரயங்கள் உண்டாகும்.

பரிகாரம் :


வியாழக்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...