கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (16-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 16, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். வர்த்தக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : சாதகமான நாள்.


பரணி : நம்பிக்கை உண்டாகும்.


கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 16, 2022



செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : மந்தமான நாள்.


ரோகிணி : அனுசரித்து செல்லவும்.


மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 16, 2022



உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.


திருவாதிரை : எண்ணங்கள் கைகூடும்.


புனர்பூசம் : வரவு மேம்படும்.

---------------------------------------






கடகம்

ஜூன் 16, 2022



வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.


பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 16, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திரம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 16, 2022



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தெளிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 16, 2022



மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக பணிகளில் எதிர்பாராத லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : வெற்றிகரமான நாள்.


சுவாதி : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


விசாகம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 16, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் உண்டாகும். தடைகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


கேட்டை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஜூன் 16, 2022



குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மூலம் : முன்னேற்றமான நாள்.


பூராடம் : சோர்வு உண்டாகும்.


உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 16, 2022



வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும், குழப்பமும் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : குழப்பமான நாள்.


திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 16, 2022



மனதில் புதுவிதமான நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியால் வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




அவிட்டம் : நம்பிக்கை பிறக்கும்.


சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 16, 2022



வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.


ரேவதி : மாற்றமான நாள்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டட வரைபடத்தில் QR Code - தினமலர் நாளிதழின் செய்தியை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...

கட்டட வரைபடத்தில் QR Code - தினமலர் நாளிதழின் செய்தியை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு... QR Code in Building Approval... >...