கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (02-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (02-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...



மேஷம்

ஆகஸ்ட் 02, 2022



உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------






ரிஷபம்

ஆகஸ்ட் 02, 2022



பத்திரம் தொடர்பான பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : விவேகம் வேண்டும்.


ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 02, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : தெளிவு ஏற்படும். 


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 02, 2022



சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




புனர்பூசம் : ஆதரவான நாள். 


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 02, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவினை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுகம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மகம் : அனுபவம் ஏற்படும்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 02, 2022



பணிகளின் தன்மையை அறிந்து முடிவு எடுக்கவும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் செயல்படவும். நட்பு அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.


சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------






துலாம்

ஆகஸ்ட் 02, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளால் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செய்கின்ற பணிகளில் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. மனதில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : சோர்வு ஏற்படும். 


சுவாதி : பதற்றமின்றி செயல்படவும்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 02, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும். 


கேட்டை : முயற்சிகள் கைகூடும்.  

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 02, 2022



புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.  பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்




மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும். 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 02, 2022



வாழ்க்கை துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


திருவோணம் : மாற்றம் உண்டாகும். 


அவிட்டம் : ஆதரவான நாள்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 02, 2022



நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்து கொள்ளவும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 




அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும். 


சதயம் : குழப்பம் நீங்கும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 02, 2022



வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : தடைகள் விலகும்.


உத்திரட்டாதி : ஆவணங்கள் கிடைக்கும். 


ரேவதி : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Maths SESSION 3 , TET 2 Social Science Session 5 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings 👉Click here for SPECIAL TET PAPER 1 MATHS SESSION 3 https://www.yout...