கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

நவம்பர் 29, 2022



கொடுக்கல், வாங்கலில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். வேலையாட்களிடம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தனம் சார்ந்த நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். பயணங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : அனுகூலமான நாள்.


பரணி : நெருக்கடிகள் நீங்கும். 


கிருத்திகை : லாபம் மேம்படும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 29, 2022



வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தம் கைகூடும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விடாமுயற்சியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : ஒப்பந்தம் கைகூடும். 


ரோகிணி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 29, 2022



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவுக்கு மீறிய செலவுகள் சிலருக்கு ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.


திருவாதிரை : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 


புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 29, 2022



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளம் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களிடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 29, 2022



பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் குறையும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




மகம் : கவனம் வேண்டும். 


பூரம் : புத்துணர்ச்சி உண்டாகும். 


உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 29, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். வியாபார பணிகளில் மற்றவர்களை சார்ந்து செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாழ்வு மனப்பான்மையால் செயல்பாடுகளில் பதற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திரம் : தெளிவு உண்டாகும்.


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 29, 2022



வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் புதிய யோகம் பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : லாபகரமான நாள்.


சுவாதி : முயற்சிகள் ஈடேறும். 


விசாகம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 29, 2022



நெருங்கியவர்களின் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். எண்ணிய பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : பிரச்சனைகள் நீங்கும். 


அனுஷம் : துரிதம் உண்டாகும். 


கேட்டை : மேன்மையான நாள்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 29, 2022



தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதில் லாபம் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : தனவரவு கிடைக்கும்.


பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திராடம் : லாபம் கிடைக்கும். 

---------------------------------------



மகரம்

நவம்பர் 29, 2022



வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தாயின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்கலாம். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : நிதானம் வேண்டும். 


அவிட்டம் : குழப்பமான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 29, 2022



வியாபாரம் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 29, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எந்தவொரு செயலிலும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சில தனவரவுகளின் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சி ஏற்படும்.


உத்திரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.


ரேவதி : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...