கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 31, 2023



சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : இழுபறிகள் குறையும்.


பரணி : முன்னேற்றம் ஏற்படும். 


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 31, 2023



பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரோகிணி : உழைப்பு அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : ஈடுபாடு ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 31, 2023



எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியான தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். 


திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 31, 2023



முதலீடு தொடர்பான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும். 


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 31, 2023



தொழில் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயமும் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மகம் : அனுபவம் ஏற்படும்.


பூரம் : வாய்ப்பு கிடைக்கும்.


உத்திரம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 31, 2023



வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் மேன்மையான சூழல் நிலவும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : தேடல் உண்டாகும்.  


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 31, 2023



பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். உலக நடைமுறைகளின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : சிந்தித்து செயல்படவும். 


சுவாதி : குழப்பமான நாள்.


விசாகம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 31, 2023



வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய விவரங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : தேடல் மேம்படும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 31, 2023



உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மறதி குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திராடம் : அறிவு வெளிப்படும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 31, 2023



கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபிட்சம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை: மேற்கு 


அதிர்ஷ்ட எண்: 2


அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 



உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.


திருவோணம் : எண்ணங்கள் கைகூடும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 31, 2023



மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : லாபம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 31, 2023



பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...