கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance App - Version 5.0 - Download Link - Updated on 08-01-2023...

 

 



>>> TNSED Attendance App - Version 5.0 - Download Link - Updated on 08-01-2023...



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இணைப்பில் உள்ள link பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்கள் &  ஆசிரியர்கள் தங்களுடைய android mobile இல்  பதிவிறக்கம் செய்யப்பட்டதினை உறுதி செய்ய வேண்டும்.

இதனை உறுதி செய்ய Play Store சென்று tnsed attendance app என search செய்து  பார்க்கும் போது *open* என வர வேண்டும். மாறாக *install* என வரக்கூடாது.

மேலும் ஆசிரியர்கள் & மாணவர்கள் வருகையை ( அனைத்து வகுப்பு & பிரிவுகள்)  காலை 10.00 மணிக்குள்ளும் , மதியம் App ஒருமுறை  sync செய்து ஆசிரியர்கள் வருகையை 2.00 மணிக்குள்ளும் பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே *Not marked* பள்ளியிலிருந்து தவிர்க்க முடியும். Submit செய்த பிறகு மீண்டும் ஒருமுறை submit செய்யக்கூடாது, logout, sync போன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை செய்தும் தங்களுக்கு  சிரமம் என்றால் தங்கள் ஒன்றிய *EMIS ஒருங்கிணைப்பாளர் அல்லது ஆசிரியர் பயிற்றுநரிடம்* தகவல் தெரிவிக்க வேண்டும்.






01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.


🪷 மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.


🪷 ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.


🪷 Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


🪷 ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.


🪷 உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.


🪷 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


🪷 புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


🪷 புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 


i) Do not log out from the app


ii) Do not click on the sync


iii) Do not clear the app data or app caches


மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...