கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...



 போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது - சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் உறுதி.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை (50% fare concession from the 6th journey onwards for passengers booking more than 5 trips in a month on State Express Transport Corporation (SETC) buses)



இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.





சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.






பேருந்துகளில் பெண்களுக்கும் தனி இருக்கை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென 4 இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.


- சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


விபத்தில் உதவுவோருக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை"


* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 வழங்கப்படும்


* மத்திய அரசால் ரூ. 5,000 வழங்கப்படும் நிலையில், மாநில அரசு சார்பிலும் ரூ. 5,000 வழங்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்


சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் அளித்த பதில்:


போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது. 


அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை. 


உள்ளூர், நகர, கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். 


தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது. 


கட்டணமில்லா பேருந்து மூலம் பெண் பயணிகள் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது. 


மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


மின்சார செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்து கழக வாகனங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதன் எண்ணிக்கை 64.65%ஆக உயர்ந்துள்ளது. 


திருநங்கைகள் 14.66 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 1.93 கோடி, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10.2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...