கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் - தமிழ் குறியீடுகள் படங்கள் (4th & 5th Standard - Tamil - Ennum Ezhuthum - Logos/ Pictures)...



>>> 4 & 5ஆம் வகுப்புகள் - எண்ணும் எழுத்தும் - தமிழ் குறியீடுகள் படங்கள் (4th & 5th Standard - Tamil - Ennum Ezhuthum - Logos/ Pictures)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

தமிழோடு விளையாடு

எளிய விளையாட்டுகள் மூலம் முன்கற்றதை நினைவுகூரும் பகுதி. குழந்தைகள் பங்கேற்று எழுத்துகளை அடையாளம் கண்டு சரியாக ஒலித்தும் சொற்களைப் படித்தும் இணையாக, குழுவாகக் கற்க இப்பகுதி வழிகாட்டும். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlஇக்கற்பித்தல் செயல்பாட்டினைத் தொடர்ந்து அரும்பு, மொட்டு, மலர் நிலையிலும் வகுப்புக்கேற்ற நிலையிலும் உள்ள குழந்தைகள் செய்வதற்கான செயல்பாடுகள் ஒவ்வொரு அலகின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிநூல் செயல்பாடுகளைச் செய்யும்போது எழுத்துகளை ஒலித்துக் கொண்டே சொற்களைப் படித்துக்கொண்டே செய்ய வழிகாட்டுங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வாங்க பேசலாம்

பாடப்பொருள் சார்ந்த கலந்துரையாடல் பகுதி. வகுப்பில் உள்ள பேசத்தயங்கும் குழந்தைகளும் தன்னம்பிக்கையுடன் பேச வழிகாட்டுவதாக குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொண்டு ஆர்வமாகப் பங்கேற்கும் தலைப்புகளை/கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடலைத் தொடங்குங்கள். கலந்துரையாடலின் நோக்கத்தை மனத்தில் நிறுத்தி சரியானபாதையில் கலந்துரையாடல் நிகழ்வதை உறுதிப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வானவில் நேரம் & வானவில் மேடை

பாடம் சார்ந்த கலை, கைவினைப்பொருள்கள் செய்யவும் கதை, பாடலை நீட்டிக்கவும் மாற்றவும் உருவாக்கவும் கூறவும் நடிக்கவும் எழுதவும் இன்னபிற படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தவும் உதவும் பகுதி. எல்லாக் குழந்தைகளும் எல்லாத் திறன்களிலும் ஆர்வமானவர் அல்லர். அவரவர்க்கு விருப்பமான செயல்பாடுகளைச் செய்து ஏற்ற திறன்பெற வழிகாட்டுங்கள். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlநமது குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் பேச்சாளர்களை, பாடகர்களை, இசைக்கலைஞர்களை, கவிஞர்களை, கதைசொல்லிகளை, நடனமணிகளை அடையாளங்கண்டு வளர்த்தெடுக்கும் களமே வானவில் மேடை.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

சொல்லக்கேட்டு எழுதுவோம்

ஆசிரியர் சொல்லச் சொல்லக் குழந்தைகள் எழுதி முடித்தவுடன் எழுதிய பகுதியை ஒவ்வொரு குழந்தையும் அருகில் உள்ள குழந்தையிடம் கொடுத்துக் கரும்பலகையில் உள்ள சரியான சொல், தொடருடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்து கொள்ளலாம்; அல்லது இணையாக, குழுவாகச் சேர்ந்து ஆசிரியர் வழிகாட்டுதலுடன் எழுதியதைத் திருத்திக்கொள்ளலாம். https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.htmlபிழைகளின்றி எழுதுவதற்கும் சரியாக ஒலிப்பதற்கும் இப்பயிற்சி உதவும். குழந்தைகளின் தேவைக்கேற்ப பயிற்சிநூலிலும் குறிப்பேட்டிலும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மெதுவாக எழுதும் குழந்தைக்கு உரிய நேரம் வழங்குவதிலும் பிழைகளைக் களைய கரும்பலகை, குறிப்பேட்டில் எழுதும் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

திறவுகோல்

செயல்பாடுகள் மூலம் பாடக்கருத்தை உணரச்செய்யும் பகுதி. செயல்பாடுகளைச் செய்ய முன்வராது ஒதுங்கி தயங்கி இருக்கும் குழந்தைகளும் வகுப்பறைகளில் இருப்பர். செயல்பாடுகளில் குழந்தைகள் மாறிமாறிப் பங்கேற்கும் வகையில் தாள்களில் எழுதிச் சுருட்டி வைக்கப்பட்ட பெயர்சீட்டுகள் அல்லது குச்சிகளில்/ பொம்மைகளில் ஒட்டப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துங்கள். அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

வானம் வசப்படும்

பாடக்கருத்தைக் கற்றபின் குழந்தைகள் மேற்கொள்ளும் பயிற்சிப் பகுதி. இது பயிற்சிநூலிலும் பாடநூலிலும் மேற்கொள்ளப்படும். அதற்கான பக்க எண், பயிற்சித் தலைப்பு போன்றவை ஆசிரியர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html4,5ஆம் வகுப்புகளில் வகுப்புக்கு ஏற்ற கற்றல்நிலையில் இல்லாத குழந்தைகள், அடிப்படையில் இருந்து செய்து கற்பதற்குரிய செயல்பாடுகள், வண்ணங்களில் வேறுபடுத்தி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்த குழந்தைகள், படிப்படியாகத் தங்கள் வகுப்புநிலைக்கேற்ற செயல்பாடுகளைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

https://kalvianjal.blogspot.com/2023/05/4-5-4th-5th-standard-tamil-ennum.html

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...