SLAS தேர்வு - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்
SLAS Exam - Tasks of Headmaster and Teachers
அனைவருக்கும் வணக்கம்
SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:
4.2.2025 - Tuesday -3 rd std
5.2.2025 - Wednesday -5th std
6.2.2025 - Thursday - 8th std
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்
🎯 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்.
🎯 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்.
🎯 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.
🎯 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
🎯 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்.
🎯 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
🎯 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்.
🎯 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
🎯 குறிப்பு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி.🙏💐