கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது



Trichy District, Vaiyampatti Block Education Officer arrested by Anti-Corruption Department


திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது


லஞ்சம் : வையம்பட்டி வட்டார கல்வி அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி


ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது


விடுபட்ட நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூ.1500 லஞ்சம் கேட்டதாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;


திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் பணி மாறுதலில் பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலாகி சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியைக்கு தான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் நான்கு நாட்கள் பணி புரிந்தமைக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.


மேற்படி பள்ளி ஆசிரியை விமலா அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு நான்கு நாட்கள் ஊதியம் கொடுபடாததற்கு சான்று கேட்டு வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார்.


மேற்படி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாபேபி, கொடுபடா சான்று வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை விமலா இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட பொறி வைப்பு நடவடிக்கையின்போது திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர் லதா பேபி, பள்ளி ஆசிரியை விமலா என்பவரிடம் இருந்து லஞ்சமாக ரூ.1500-யை கேட்டு பெற்று கையில் வைத்திருந்த போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



>>> லஞ்ச ஒழிப்புத் துறையின் பத்திரிகை செய்தி 



Amazon Brand - Solimo Stainless Steel Cubix Water Bottles Set of 3, 1L Each | Rust-Resistant, Shatter-Proof, Spill-Proof | Food Grade Steel | Office, School, Travel | Dishwasher Safe (Silver)


https://amzn.to/4aWzF0K




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு தணிக்கை தடை ரத்து வணிகவிய...