கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anti-corruption Department லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anti-corruption Department லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது



Trichy District, Vaiyampatti Block Education Officer arrested by Anti-Corruption Department


திருச்சி மாவட்டம், வையம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது


லஞ்சம் : வையம்பட்டி வட்டார கல்வி அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி


ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது


விடுபட்ட நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூ.1500 லஞ்சம் கேட்டதாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;


திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் பணி மாறுதலில் பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலாகி சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியைக்கு தான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் நான்கு நாட்கள் பணி புரிந்தமைக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது.


மேற்படி பள்ளி ஆசிரியை விமலா அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு நான்கு நாட்கள் ஊதியம் கொடுபடாததற்கு சான்று கேட்டு வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார்.


மேற்படி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாபேபி, கொடுபடா சான்று வழங்க ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை விமலா இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட பொறி வைப்பு நடவடிக்கையின்போது திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர் லதா பேபி, பள்ளி ஆசிரியை விமலா என்பவரிடம் இருந்து லஞ்சமாக ரூ.1500-யை கேட்டு பெற்று கையில் வைத்திருந்த போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



>>> லஞ்ச ஒழிப்புத் துறையின் பத்திரிகை செய்தி 



Amazon Brand - Solimo Stainless Steel Cubix Water Bottles Set of 3, 1L Each | Rust-Resistant, Shatter-Proof, Spill-Proof | Food Grade Steel | Office, School, Travel | Dishwasher Safe (Silver)


https://amzn.to/4aWzF0K




சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை (Anti-corruption Department raids Chidambaram District Education Office)...



 சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை (Anti-corruption Department raids Chidambaram District Education Office)...


சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ரெயிலடி ) வளாகத்தில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் இ பி எஃப், பி எஃப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதவியாளர் சந்திரசேகர் மற்றும் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோரிடம் கணக்கில் வராத 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்