கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS ஓய்வூதியம் - இன்று விசாரணைக்கு வரும் வழக்கின் நிலவரம்

 

 CPS ஓய்வூதிய வழக்கு - இன்று விசாரணைக்கு வரும் வழக்கின் நிலவரம் :


ஓய்வூதிய வழக்கில்  மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தலைமை வழக்கறிஞர் ஆஜர்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில்  11.12.2025 அன்று விசாரணைக்கு வந்தது.


 * இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate General) ஆஜராகி 01.04.2003 முதல்  புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. மனுதாரர் 2005 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து உள்ளார். 2012 ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார். பங்களிப்பு ஓய்வூதியத் தொகை LIC ல் முதலீடு செய்யப்பட்டு GPF தொகைக்கு இணையாக வட்டி வழங்குவதால் 0.6%  அரசிற்கு இழப்பு ஏற்படுகிறது.  இதுநாள் வரை  ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51,000 பேருக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. அரசாணை எண்கள்: 259, 430, 304 ஆகியவற்றை எதிர்த்து இதே காரணத்திற்காக தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல் இவ்வழக்கினையும் தள்ளுபடி செய்யக் கோரினார்.


* அப்போது குறுக்கிட்ட நீதியரசர் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை குறித்து வினா எழுப்பியதுடன் மனுதாரரின்  புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த எழுத்துப் பூர்வமான கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு நீதியரசர்கள்  15.12.2025 இன்றைக்கு பிற்பகல் 2.15க்கு  வழக்கை ஒத்திவைத்தனர்.


Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு தணிக்கை தடை ரத்து வணிகவிய...