பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 04.02.2026
கிழமை:- புதன்
திருக்குறள்:
குறள் 304:
விளக்க உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பணத்தை விட அறிவே உயர்ந்தது
2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.
பொன்மொழி :
இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
- ஔவையார்
பொது அறிவு :
01.ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?
HMS சேலஞ்சர்- HMS Challenger
02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?
அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 America -Lunar Orbiter 1
English words :
cascade-waterfall
studious-hardworking
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.
பிப்ரவரி 04
வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்
வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
நீதிக்கதை
குறள் :
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
விளக்கம் :
கதை :
நீதி :
தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.
இன்றைய செய்திகள்
04.02.2026
⭐இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
⭐ இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Today's Headlines
⭐ The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government hospital.
⭐The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..
⭐ Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.
*SPORTS NEWS*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.