கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 11.02.2026 

கிழமை:- புதன்


 

திருக்குறள்: 

குறள் : 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

விளக்கம்:

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.


பழமொழி :
Affection lives where kindness stays.        

கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.


பொன்மொழி :

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி


பொது அறிவு :

01.சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?

சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang

02.தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது?

சோழமண்டலக் கடற்கரை

Coromandel Coast


English words :

concordance - to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences


தமிழ் இலக்கணம்:

சுற்றுமா? சுழலுமா?
வாருங்கள் பார்ப்போம்

1. பம்பரம் சுழல்கிறது


2. பூமி சூரியனை சுற்றிகிறது.


ஏன் முதல் வாக்கியத்தில் சுழல்கிறது இரண்டாம் வாக்கியத்தில் சுற்றுகிறது?
ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றும் போது சுழல்கிறது என்று சொல்ல வேண்டும்
வேறு பொருளை சுற்றும் போது சுற்றுகிறது என்று சொல்ல வேண்டும்
இன்னும் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. மின்விசிறி சுழல்கிறது


2. பூமி தன் அச்சில் சுழல்கிறது


3. மாலா பூந்தோட்டத்தை சுற்றி வந்தாள்


4. முகமது தன் வீட்டைச் சுற்றி சுற்றி விளையாடினான்.



அறிவியல் களஞ்சியம் :

500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.


பிப்ரவரி 11

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.


நீதிக்கதை

தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது.

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார்.

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர்.

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :

புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.


இன்றைய செய்திகள்

11.02.2026

⭐தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு

⭐கேரளாவின்  மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.


Today's Headlines

⭐The Meteorological Department has informed that dry weather is likely to prevail in Tamil Nadu till the 16th.

⭐The US government has decided to provide full duty exemption on garments and textile products manufactured in Bangladesh

⭐24-year-old Tanya Nathan has been named Kerala's most physically challenged civil judge.

*SPORTS NEWS*

🏀 India and Sri Lanka are jointly hosting the 10th T20 World Cup. Australia and Ireland will face each other in the 14th league match of the series today.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Future Ready Questions - தங்களது பள்ளியில் உள்ள Smart Board அல்லது Tab வழியாக பயிற்சி வழங்குவதற்கான தெளிவான விளக்கம்

  1-5th Standard Future Ready Questions Procedure  FUTURE READY QUESTION PRACTICE CLASS 1-5 | CMS LOGIN எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரிய...