பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 20.02.2026
கிழமை:- வெள்ளி
திருக்குறள்:
குறள் 341:
விளக்க உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
Borrowing is sorrowing.
கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.
2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?
02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?
English words :
consequence –impact happens due to some incidents
ஒரு செயலினால் ஏற்படும் பின்விளைவுகள்.
contest –a competition to find out who is the best
யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி
தமிழ் இலக்கணம்:
சரியான விடை –பசு கன்றுகளை ஈன்றது.
2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.
சரியான விடை
கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.
3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது
அறிவியல் களஞ்சியம் :
இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது
பிப்ரவரி 20
சமூக நீதிக்கான உலக நாள்
சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.
எதையும் நாமே நாடிப்போவது சரியா?
ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.
ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.
பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.
அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.
எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.
இன்றைய செய்திகள்
20.02.2026
⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி
⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.
Today's Headlines
⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.
⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.
⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.
🏀 Sports News
🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.