கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings



 பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த தகுதியான பள்ளிகளை தெரிவு செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6. 

ந.க.எண் 081540/எம்2/இ2/2025 நாள்: 06.03.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் தொடர்பாக


பார்வை: 

1) இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களின் செய்தி வெளியீடு எண் 2156, நாள் 30.11.2022 

2) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க எண் 081540/எம்2/இ2/2023 , நாள்  24.12.2025

3) அரசாணை (நிலை) எண் 45 பள்ளிக் கல்வி (ப.க. 5(1))த் துறை நாள் 24.02.2026 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 30.11.2022 நாளிட்ட அறிவிப்பின்படி "கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் நிறன் மேம்பாடு, தலைமைத்துவம். மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை(3)ல் காணும் அரசாணையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு தருதியான பள்ளியினை தெரிவு செய்து விருது வழங்குதல் சார்ந்து பின்வரும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பொதுத் தேர்வுகள் / திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் கலைத்திருவிழா, மன்ற எண்ணிக்கை, விளையாட்டுப் போட்டிகள். செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலும். பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின் பயன்பாடு போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு: பள்ளிவளாக தூய்மை. மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை.


பள்ளியின் பசுமைச் சூழல், பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும் அதன் பயன்பாடு நூலக பயன்பாடு ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருதுக்கான குழு அமைத்தல்


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட / மாநில அளவில் பின்வரும் தேர்வு குழுவினை கீழ்கண்டவாறு அமைத்திட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத் தேர்வுக் குழு

  • முதன்மைக் கல்வி அலுவலர்
  • முதல்வர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
  • மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்


மாநில தேர்வுக் குழு

  • பள்ளிக் கல்வி இயக்குநர்
  • தொடக்கக் கல்வி இயக்குநர்
  • இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • தொடக்கக் கல்வி இணை இயக்குநர்.(நிர்வாகம்).
  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு  நலப்பணித் திட்டம்)


மேலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாவட்டத் தேர்வு குழு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவீட்டின் முறையின் அடிப்படையில் விருதுக்கு தகுதியான பள்ளிகளை 1:2 என்ற விகிதத்தில் தெரிவு செய்து மாநில மாவட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வு குழு மற்றும் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரை பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்குரிய பள்ளிகளை மாவட்ட வாரியாக தெரிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட தேர்வுக்குழு அரசு தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் இரண்டு மற்றும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிகளில் ஏதேனும் இரண்டு என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு தகுதியான 4 பள்ளிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு படிவத்தின் விவரப்படி தேர்வு செய்து கருத்துருக்களை 13.03.2026 க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர்


1) பார்வை(3)ல் காணும் அரசாணையின் நகல்

2) அடைவுத்திறன் மதிப்பீட்டு படிவம்


பெறுநர்


1) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகள்

2) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1) இயக்குநர். தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.

2) அரசு செயலாளர், பள்ளி கல்வித் துறை தலைமைச் செயலகம். சென்னை 9


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...