கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட் 2026 - செய்தி வெளியீடு

 


8th Standard Public Examination for Private Candidates – August 2026 – Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர்தான் தனித்தேர்வராக எழுத முடியும்.


எட்டாம் வகுப்பு தனித்தேர்வராக எழுத எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை 


ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பிற்குள் இடை நின்றவர்கள் மாற்றுச் சான்றிதழ் இருப்பின்


எவ்வித கல்வி தகுதியும் இல்லாதவர்கள் Birth Certificate கொண்டு 8ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம் .


தேவைப்படுவோர்க்கு பகிர்க



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006


தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட்-2026


செய்திக்குறிப்பு


1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்


ஆகஸ்ட் 2026-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.08.2026 அன்று 12 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 01.07.2026 பிற்பகல் முதல் 08.07.2026 வரை (ஞாயிற்றுக்கிழமை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centres) நேரில் சென்று online மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கலாக)


2. தேர்வுக் கட்டண விவரம்


விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/-மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 09.07.2026 மற்றும் 10.07.2026 ஆகிய நாட்களில் (இரண்டு நாட்கள்) தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகையான ரூ.500/- ஐ கூடுதலாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.


3. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை


> முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்


விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பள்ளி பதிவுத்தாள் நகல் பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். /


> ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்


ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


தனித்தேர்வர்கள் ரூ.42/- க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


5. இத்தேர்விற்கான விரிவான தகவல்கள் www.dge.tn.gov.in என்ற  இணையதளத்தில் வெளியிடப்படும்.


இணைப்பு : தேர்வு கால அட்டவணை


ஒம்/-

இயக்குநர்


இடம் : சென்னை-600 006


நாள் : 12.06.2026




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 - ஆதார், புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்ய உத்தரவு

NHIS 2026 – Order by the Department of Treasuries and Accounts to upload details regarding Aadhaar, photographs, disability categories, and ...