தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் / பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய RTI தீர்ப்பு
✒ அனைத்து தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை (Fee Structure) பொதுமக்கள் கேட்காமலேயே தங்கள் பள்ளிகளின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் பார்வைக்கு பள்ளியின் விளம்பர பலகையில் விளம்பரம் செய்தும் அனைத்து பள்ளிகளின் இணையதளங்களில் வெளியிடவும் உத்தரவு
✒ தனியார் ( மெட்ரிக்) பள்ளிகள், CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் வலியை போக்கும் ஒர் மகத்தான தீர்ப்பு.
✒ பெற்றோர்கள் தங்கள் நிகழ்கால அத்யாவசிய தேவைகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு செலவிடக்கூடிய ஒவ்வொரு காசிலும் பெற்றோரின் உழைப்பும் இரத்தமும், வியர்வையும் தங்கள் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்ற பேரவாவும் அடங்கியுள்ளது.
✒ தங்கள் பொருளாதார தகுதியை மீறி ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அளிக்கும் கல்வி கட்டணத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களுக்கு வெளிப்படை தன்மையோடு கூடிய கணக்கு வழக்குகளை கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியது இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அடிப்படையான அவசியமான ஒன்றாகும்.
✒ மாணவர்களின் கல்விக் கட்டணம் என்பது பொது நலன் சார்ந்தது ஆகும்.
✒ மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிகமிக அவசியமான ஒன்றாகும்.
✒ RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் தகவல் கோரி இரண்டரை ஆண்டுகளாக தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர்
RTI பிரிவு 19(8)(b) -ன்கீழ் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு.
✒உரிய காலத்திற்குள் தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர் மீது பிரிவு 20(2)ன் கீழ் துறை ரீதியான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான எழுத்து மூலம் விளக்கம் அளிக்கவும் உத்தரவு..
✒ தகவல் ஆணையத்தின் ஆணையினை சிறிதும் மதிக்காமலும் பொருட்படுத்தாமலும் இருந்த பொது தகவல் அலுவலரை ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது.
✒ RTI பிரிவு 19(8XaX2) ன்படி இயக்குநர், (தனியார் பள்ளிகள்) பள்ளிக்கல்வித்துறை சென்னை அவர்களை பொது தகவல் அலுவலராக நியமிக்க கூடும் எனவும் ஆணையம் எச்சரிக்கின்றது.
✒ மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர். இளம்பரிதி, MA., B.L., M.Phil., அவர்கள் உத்தரவு
வழக்கு எண் :
SA 4827/A/2023 & SA 17794/A/2023
ஆணை நாள் : 25.05.2026
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
RTIACT2005
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
%20(1).png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.