27 இ.ஆ.ப., அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணைகள் G.O.Rt.No. 3213, Dated : 08-09-2026 வெளியீடு
27 IAS officers transferred
தமிழ்நாட்டில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமனம்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம்.
சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம்.
விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.
💥 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்
பெரம்பலூர் ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொன்னேரி உதவி ஆட்சியராக இருந்த அப்துல் ரசாக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு உதவி ஆட்சியராக இருந்த வி.நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.ரவிக்குமார், வேளாண்மை-உழவர் நலத் துறை இணைச் செயலராக மாற்றம்.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம்
கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம்
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம்
அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம்
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம்
பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம்
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம்
டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்
தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம்
தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்
>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.