திறன் சார்ந்த மதீப்பீடு - உயர்திறன் வினாக்கள் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் பொருட்டு வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
Assessment based quiz for Class 6 to 9 - Guidelines
Competency-based assessment - Conducting quizzes using higher-order thinking questions to foster students' thinking skills - Guidelines - Joint proceedings of the State Project Director, the Director of School Education, and the Director of Elementary Education.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-06
ந.க. எண்.76896/PD1/S3/2026, நாள். 02.09.2026
பொருள்:
பள்ளிக் கல்வி - திறன் சார்ந்த மதீப்பீடு - உயர்திறன் வினாக்கள் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் பொருட்டு மாவட்டம் தோறும் 6 முதல் 9 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல், வழிகாட்டி நெறிமுறைகள் சார்ந்து.
பார்வை : G.O. (Ms) No.155, School Education (ERT) Department, dated 16.11.2021
அரசுப் பள்ளி மாணவர்கள் சிந்தித்து சாதிக்கும் தலைமுறைகளாக மாறும் வகையில் அவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் வினாடி வினா நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் உயர்திறன் வினாக்களுக்கு பதிலளிக்க பழக்கும் விதமாகவும், சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாகவும், மாணவர்களை கணினி வழி போட்டித்தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதமாகவும், உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தினை சிறப்பாக பயன்படுத்தும் நோக்கத்திலும் இந்த மதிப்பீடானது மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக புதிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைப்பு 1 இல் உள்ளவாறு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
2. இந்த வினாடி வினா நிகழ்வை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.
3. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
4. ஒரு பாடத்திற்கு 4 வினாக்கள் வீதம் 5 பாடத்திற்கு மொத்தம் 20 வினாக்கள் கொண்ட வினாத்தாளை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு 30 நிமிடம் கால அளவாக நிர்ணயிக்க வேண்டும்.
5. உயர்தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இணைப்பு 2 இல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:
1. வினாடி வினா மதிப்பீடு நடத்துவதற்கான அட்டவணை
2. வழிகாட்டு நெறிமுறைகள்
இயக்குநர்
தொடக்கக்கல்வி இயக்கம்
இயக்குநர்
பள்ளிக் கல்வி இயக்ககம்
மாநில திட்ட இயக்குநர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
பெறுநர்:
1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி)
3. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்
நகல்
1. இயக்குனர், மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.