கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சமூக நீதித்துறை பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு (Promotions) குறித்த அறிக்கை



 சமூக நீதித்துறை பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்த அறிக்கை


Report on promotions granted in schools under the Department of Social Justice


சமூக நீதித்துறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகளும், 99 நடுநிலைப்பள்ளிகளும், 108 உயர்நிலைப்பள்ளிகளும், 98 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1138 பள்ளிகள் இயங்கிவருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் 31.05.2026 அன்றைய நிலையில் தலைமையாசிரியர் பணியிடங்களில், 15 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 54 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 37 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 105 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலிப்பணியிடங்களாக இருந்தது.



மேற்கண்ட காலிப்பணியிடங்கள் மூலம் கல்விப்பணிகள் பாதிக்காவண்ணம் முழு கூடுதல் பொறுப்பில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.


மேலும் 02.11.2026 அன்று 15 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது. அதே நேர்வில் கடந்த ஆறு வருடங்களாக, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள்/ காப்பாளர்களின் பணியிடங்கள் 13.11.2026 மற்றும் 14.11.2026 ஆகிய நாட்களில் நடைபெற்ற பதவிஉயர்வுக்கான கலந்தாய்வில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப 54 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 76 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 178 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) அலுவலகத்தில் இன்று (16.11.26) நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பதவி உயர்வு ஆணைகள் வழங்கினார். இந்நிகழ்வில் சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர். என். சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் (மு.கூ.பொ) மற்றும் தாட்கோ மேலாண்மை இயக்குநர் டாக்டர். கி. செந்தில் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


இப்பதவி உயர்வு, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை, மாணாக்கர்களின் கல்வி நலன் மற்றும் ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் நல பள்ளிகளின் கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணிநிபந்தனைகள் ) சட்டம் 2016, பிரிவு 47(1)ன் படி சுமார் 178 ஆசிரியர்களுக்கு அவர்களின் முன்னுரிமை, கல்வித்தகுதி மற்றும் TET தகுதித்தேர்வு தேர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப முதுகலைப்பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


மேற்படி பதவி உயர்வு மூலம் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டில் 818 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பித்தருமாறு கோரப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rainwater Harvesting Training - Key Instructions

 மழைநீர் சேகரிப்பு பயிற்சி - முக்கிய அறிவுறுத்தல்கள் Rainwater Harvesting Training - Key Instructions >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொ...