கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Uniform லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Uniform லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் EMIS Portalல் பதிவுசெய்ய 06.08.2026 இறுதி நாள்



சீருடை வழங்க சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் EMIS Portalல் பதிவுசெய்ய இறுதி நாள் 06.08.2026 - Director Proceedings


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.


ந.க. எண். 1593680/கே2/2025, நாள் 04.08.2026.


பொருள்:


தொடக்கக் கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கை அடிப்படையில் சீருடை அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக EMIS விவரப்படி மாணவ/மாணவிகளின் விவரங்கள்-சத்துணவு உண்ணும் மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் உள்ளீடு செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக.


பார்வை :


சென்னை-5, சமூக நல இயக்குநரின் ந.க. எண்.1577426/சிதி-3/2025, நாள் 22.07.2026. கடிதம்


பார்வையில் காணும் சமூக நல இயக்குநரின் கடிதத்தில், 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு புதிய மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என்பதால், மாணவர்களுக்கு அளவெடுத்து நான்கு இணை சீருடைகள் தைத்து உரிய காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். எனவே சங்க உறுப்பினர்கள் பள்ளிகளுக்கு சென்று புதியதாக சேர்ந்த மாணக்கர்களை அளவெடுப்பதற்கு ஏதுவாக வட்டார வாரியாக (BEO, DEO wise) மற்றும் பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக மாணாக்கர்களின் விவரம் EMIS portal-ல் பதிவேற்றம் செய்து வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2026-27 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு ஆகியவற்றில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ/மாணவிகள் விவரங்கள் தனித்தனியாக Hilly/Non-Hilly வாரியாக பிரித்து வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கையின் அடிப்படையில் சீருடைகள் அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக மாணவ/மாணவிகள் விவரங்கள் சமூக நல இயக்ககத்திற்கு அனுப்பும்பொருட்டு, பள்ளிகளில் புதியதாக சேர்ந்த சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் 06.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


(தொடக்கக் கல்வி) தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)- மின்னஞ்சல் மூலமாக.


2 அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர்கள்


(தொடக்கக் கல்வி) மூலமாக )



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Process for update Uniform status



Process for update Uniform status


Uniform measurement - Noon Meal - YesNo status


UNIFORM MEASUREMENT - NOON MEAL - YES/NO STATUS MARKING - USER MANUAL



>>> Click Here to Download 



SCHOOL LOGIN :

HTTPS://EMIS.TNSCHOOLS.GOV.IN/SCHOOL/CLASSANDSECTION


STEP 1:

LOG IN TO THE SCHOOL PORTAL AND SELECT "CLASS AND SECTION GROUPING MODULE


STEP 2:

CHECK WHICH CLASS AND SECTION THE PARTICULAR CLASS TEACHER IS TAGGED TO. IF THE TEACHER IS NOT TAGGED, ENSURE THEY ARE ASSIGNED TO THE APPROPRIATE CLASS AND SECTION.


STEP 3:

LOG IN TO THE TNSED SCHOOLS APP USING THE RESPECTIVE CLASS TEACHER’S LOGIN CREDENTIALS.


STEP 4:

CLICK ON THE SCHEMES ICON IN THE TN SCHOOLS APP.


STEP 5:

CLICK ON THE RESPECTIVE CLASS AND THEN SELECT THE SECTION.


STEP 6:

PLEASE VERIFY THE SPECIFIC STUDENTS AND CHANGE THEIR STATUS TO YES. ONCE UPDATED, ONLY THOSE STUDENTS WILL BE DISPLAYED IN THE ICO LOGIN UNDER THE UNIFORM MEASUREMENT MODULE. 

AFTER MAKING THE CHANGES, CLICK THE SAVE BUTTON TO APPLY THEM.


STEP 7:

AFTER THE CHANGES ARE MADE IN THE SCHOOL LOGIN, THE UPDATED STUDENT LIST WILL BE REFLECTED IN THE ICO LOGIN IN 

TNEMIS:

HTTPS://TNEMIS.TNSCHOOLS.GOV.IN/COMPONENT/UNIFORM-MEASUREMENT-TRACK



விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணைச் செயல்முறைகள், நாள்: 25-07-2024...


 பள்ளிக்கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணைச் செயல்முறைகள், நாள்: 25-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு உதவி பெறும் பள்ளிகளில்1முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் / மாணவியருக்கு வழங்கப்படும் 4 இணை விலையில்லா சீருடைகளை முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Students in Government Aided Schools from 1st to 8th class should properly wear 4 set uniforms provided free of cost - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 53550/இ/இ1/2021, நாள்: 08-12-2021...

 


>>> அரசு உதவி பெறும் பள்ளிகளில்1முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் / மாணவியருக்கு வழங்கப்படும் 4 இணை விலையில்லா சீருடைகளை முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Students in Government Aided Schools from 1st to 8th class should properly wear 4 set uniforms provided free of cost - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 53550/இ/இ1/2021, நாள்: 08-12-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...