கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிச் சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணிச் சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை



 EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை


EDC ஐ வைத்து வாக்களிப்பவர்களும் (தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள்) கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.


 எனவே தேர்தல் பணிக்கு செல்லும் பொழுது தேர்தல் பணி சான்றுடன் (Election Duty Certificate) வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம் கொண்டு செல்லவும்.




TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி Service Certificate வழங்க வேண்டும் - DSE Proceedings


ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET தேர்விற்கு தாமதமின்றி பணிச் சான்று (Service Certificate) வழங்க இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் தகுதி தேர்விற்கு TET  விண்ணப்பிக்க தாமதமின்றி பணிச் சான்றிதழ் (Service Certificate) வழங்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET - Service Certificate பெற விண்ணப்பிப்பவர்களுக்கான முகப்பு கடிதம் & Annexure 1 படிவம்


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு TET - Service Certificate விண்ணப்பிப்பவர்களுக்கான முகப்பு கடிதம் (Covering Letter), Service Certificate Annexure 1 படிவம்


TET SERVICE CERTIFICATE WITH COVERING LETTER



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET பணிச்சான்று பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்


TET பணிச்சான்று ( Service Certificate ) பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் சார்ந்து திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்




TETக்கு விண்ணப்பிக்க Service Certificate பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - DEOs Proceedings


TETக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள்: 17-02-2026


Attachments to be attached to obtain Service Certificate to apply for TET - Proceedings of District Education Officers, Date: 17-02-2026


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பணிச்சான்று வழங்குவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் குறித்தான சிவகங்கை & இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் கடிதம் நாள்: 17.02.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEOs Proceedings


பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)


1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்


TNTET 2026 பணிச் சான்றிதழ் (Service Certificate) நிரப்பும் முறை



ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Service Certificate Annexure-I) நிரப்புவது எப்படி? 



>>> படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TNTET 2026 பணிச் சான்றிதழ் (Service Certificate) நிரப்பும் முறை


படிவத்தை நிரப்பும் முறை (How to Fill):


*Name of the Teacher:* உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.


*Date of Birth and Age:* உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.


*Name of the Post held now:* தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).


*Date of Joining in the present post:* தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.


*Date of Initial Appointment:* முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.


*Name of the Post during Initial Appointment:* முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.


*Date of Regularization:* பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.


*Working Department:* நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).

Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.


*Full Time / Consolidated / Part Time:* காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.


*Name of the School with Address:* பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.


*Working District:* பணிபுரியும் மாவட்டம்.

School UDISE CODE: பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.


*Qualification:* உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).


*Teacher EMIS ID NO:* உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.


*IFHRMS Employee ID:* அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).


*கையொப்பம்:* இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.


 வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...