கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Compensatory Leave லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Compensatory Leave லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர்கள் பயிற்சி பெறும் நாட்கள், விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்பதற்கான அரசாணை



 விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்நாட்களுக்கு ஆசிரியர்கள் ஈடு செய்யும் விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம்   என்பதற்கான அரசாணை (நிலை) எண். 62 , நாள் : 13.03.2015 


Government Order stating that if the days on which teachers are undergoing training fall on holidays, they may be allowed compensatory leave of not more than 10 days


G.O. Ms. No. 62, Dated : 13-03-2015 - விடுமுறை நாட்களில் பயிற்சி வந்தால், பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், ஈடு செய்யும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




சுருக்கம்


பள்ளிக் கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல்/ஈடுசெய்யும் விடுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக் கல்வித் (அகஇ) துறை


அரசாணை நிலை எண். 62 , நாள் : 13.03.2015 


திருவள்ளுவர் ஆண்டு 2046

மாசி 28


படிக்கப்பட்டவை:-


1. அரசாணை நிலை எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008


2. அரசாணை நிலை எண்.89, பள்ளிக் கல்வி, நாள் 21.4.2008


3. அரசாணை நிலை எண்.128, பள்ளிக் கல்வி, நாள் 7.5.2010


4. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 33094/ இ1/ 2014, நாள் 5.12.2014.


ஆணை:


மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் (Cluster Resource Centres (CRC)) செயல்வழிக் கற்றல் பயிற்சி (Activity Based Learning (ABL)) பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 1-5 வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் படைப்பாற்றல் கல்வி பயிற்சி (Active Learning Method (ALM)) பெறும் 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு அவர்கள் ஒரு ஆண்டில் பயிற்சி பெறும் 10 நாட்களையும் 10 பணி நாட்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாட்களை பள்ளி செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாட்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.


2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் வகையில் மேற்காணும் அரசாணைக்கு திருத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் பயிற்சி பெறும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 1-8 வகுப்பு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு ஆண்டில் பயிற்சி பெறும் 10 நாட்களை பணிநாட்களாக கருதலாம் என்றும், அந்த 10 நாட்கள் பள்ளி செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாட்களுக்குள் அடங்கும் எனவும், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு ஆண்டில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி பெறும் 10 நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என திருத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


4, மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் தொகுப்பு கலந்தாய்வு மையங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறுவதால், அப்பயிற்சியில் கலந்து கொள்ளும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டியுள்ளதால் பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சிகளில் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு அனுமதிக்க உரிய ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டார்.


5 தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008க்கு கீழ்வருமாறு திருத்தம் வெளியிடுகிறது.


திருத்தம்


அரசாணை (நிலை) எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008ன் பத்தி 3-க்கு கீழ்க்கண்டவாறு மாற்றீடு செய்யப்படுகிறது:


3. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாட்களில் வழங்க கருத வேண்டும். மேலும் அவ்வாறு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம். விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.


(ஆளுநரின் ஆணைப்படி)


த.சபிதா

அரசு முதன்மைச் செயலாளர்


பெறுநர்

தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை -6.

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6.

மாநில திட்ட இயக்குநர்,

அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை-6.


// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//


பிரிவு அலுவலர்


CRC பயிற்சியில் ஏதுவாளர்களாக செயல்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Sivaganga Chief Educational Officer Proceedings for grant of Compensatory Leave to B.T.Assistants (Graduate Teachers) to act as facilitators in CRC Training) ந.க.எண்: 1557/மாஒ7/ஒபக/2022, நாள்: .12.2022...


>>> CRC பயிற்சியில் ஏதுவாளர்களாக செயல்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Sivaganga Chief Educational Officer Proceedings for grant of Compensatory Leave to B.T.Assistants (Graduate Teachers) to act as facilitators in CRC Training) ந.க.எண்: 1557/மாஒ7/ஒபக/2022, நாள்: .12.2022...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்