கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Senthilbalaji லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Senthilbalaji லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

 


மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது. 


1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது) 

2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது)

3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம். 


இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் அல்லது விளக்கம் கொடுக்கும். மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளையும், தரும் விளக்கங்களையும், ஜூனியர் விகடன், Follow-up கட்டுரையாக வெளியிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ #மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. 

இவ்வாறு அமைச்சர் அவரது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை (Monthly Electricity Bill Calculation Method) வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...

 மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை வாக்குறுதி - முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் - அமைச்சர் தகவல்...


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.








கொரோனா காரணமாக தமிழ்நாடு மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - மின்துறை அமைச்சர்...

 மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் தகவல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறுமாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.




மின்தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்...



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று (23.05.2021) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.




இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், மின்தொடரமைப்பு கழகத்தின் மேலாண்ணைம இயக்குநர் எஸ். சண்முகம், நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக மாண்புமிகு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.




மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பு கவனம் செலுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் 31.05.2021 வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின் போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்/ பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


 


தற்பொழுது கோடைமழை பெய்து வருவதால் மின்தேவைகள் கணிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், தற்பொழுது காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்காலிக மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் காலமுறை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக பொது மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்தி வெளியீடுகள் வெளியிடப்படவேண்டும் எனவும், சராசரி மின் இழப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைளை பின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மின்தளவாட பொருட்கள் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.




பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 9445850811 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும்.




பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்கள் தொடர் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மின்தடை தொடர்பான விவரங்களை உரிய பதிவேடுகளில் பணியில் உள்ள அலுவலர்கள் முறையாக பதிவு செய்து பராமரித்திட வேண்டும். களப்பணிகளை ஆய்வு செய்திட பணிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கூறிய பதிவேடுகளை தணிக்கை செய்திட வேண்டும்.




களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களும், முகக்கவசம், கையுறை மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு பணிசெய்திட வேண்டும் எனவும் குறிப்பாக கட்டுபடுத்தபட்ட (Containment) பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




மேலும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்கமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.




கொரானா தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்றிடவும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் சானிடைஸ்சர் வழங்கிடுமாறு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...