கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) ஊதியம் உயர்வு - திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு...

 


பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) மே மாதம் தவிர்த்த 11 மாதங்களுக்கு ரூ.10,000 ஊதியம் - திருத்தம் செய்து புதிய அரசாணை (நிலை) எண்: 20, நாள்: 02-02-2021 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 20, நாள்: 02-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (06-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்


மேஷம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

தொழில் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். காலில் சிறு சிறு வலிகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சலும், குழப்பமும் தோன்றும். உடனிருப்பவர்கள் பற்றிய கருத்துக்களையும், ரகசியங்களையும் மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : கவனம் வேண்டும். 


பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.


கிருத்திகை : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் உண்டாகும். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்களும், ஆதரவும் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஏஜென்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.


ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், செயல்பாடுகளில் சோர்வும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : இழுபறிகள் அகலும்.


திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.


புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

வியாபாரம் தொடர்பான பணிகளில் பழைய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகளும், பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். 


பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 


ஆயில்யம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

மனதிற்கு நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை மேம்படும். நண்பர்களுடன் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

மனதில் புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்களை வகுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், சுபவிரயங்களும் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். நவீன கருவிகளை பயன்படுத்துவதில் சற்று விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திரம் : எண்ணங்கள் தோன்றும்.


அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும். 


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

உறவினர்களின் மூலம் ஆதாயமும், மகிழ்ச்சியான சூழ்நிலைகளும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாரிசுகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகளும், ஆசிரியரின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஆதாயம் உண்டாகும். 


சுவாதி : முயற்சிகள் ஈடேறும். 


விசாகம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு மறையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



விசாகம் : வெற்றி கிடைக்கும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

திடமான நம்பிக்கையுடன் திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த உதவிகள் எதிர்பார்த்த விதத்தில் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூராடம் : தீர்வு கிடைக்கும். 


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், நெருக்கமும் அதிகரிக்கும். சிலருக்கு மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான எண்ணங்கள் மாறுபடும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும். 


திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

செயல்பாடுகளில் தனித்திறமையுடன் செயல்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மேன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : பாராட்டுகளை பெறுவீர்கள். 


சதயம் : லாபம் மேம்படும்.


பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 06, 2021


தை 24 - சனி

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகளால் மாற்றங்கள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளும், கொள்முதலும் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்


ரேவதி : அனுபவம் உண்டாகும்

வருமான வரி - நீங்கள் வரிவிலக்கு பெறக்கூடிய பிரிவுகள் என்னென்ன? எவ்வளவு பெறலாம்? - முழு விளக்கம்...

 


>>> Income Tax : நீங்கள் வரிவிலக்கு பெறக்கூடிய பிரிவுகள் என்னென்ன? எவ்வளவு பெறலாம்? - முழு விளக்கம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூபாய் 12110கோடி தள்ளுபடி - பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...

 


>>> பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான செய்தி வெளியீடு, நாள்: 05-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு?- இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

 


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி கரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது.


தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான கோப்புகள் முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இன்றே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தேர்வான 1910 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை -ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் கோரிக்கை...

 தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான 2144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அந்த பணியிடங்கள் பின்னடை பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மறுதேர்வு வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு தேர்வு வாரியம் 1:2 விகிதத்தில் நடைமுறைப்படுத்தியது. அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அடுத்துள்ள நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே அவர்கள் பள்ளிக்கல்வித்துறையை முற்றுகையிட்டனர். அப்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர். ஆனால் 10 மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது வரை பணிநியமன  ஆணை வழங்கப்படாததால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக 2019 -2020 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் 1910 உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அந்த பணியிடங்களை சான்றிதழ் சரிபார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரிய  தலைவரை 2018-19 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சந்தித்து 2019-20 ஆம் ஆண்டு அறிவித்துள்ள பணியிடங்களை வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் 2018-19 ஆம் ஆண்டு அறிவித்த பணியிடங்கள் பின்னடைவு  பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு மறுபடியும் தேர்வு வைத்தே நிரப்பப்படும் என கூறினார்.

இதனால் சான்றிதழ் சரிபார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் அதிகப்படியான எண்ணிக்கையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே அந்த பணிகளுக்கு உடனே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசாணை (நிலை) எண் : 26, நாள்: 02-02-2021, வங்கி மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து பெற்ற வீட்டுக்கடனை அரசுக்கடனாக மாற்ற விதிகளில் திருத்தம் செய்து ‌‌அரசாணை வெளியீடு...

 


G.O Ms.No.26, Dt: 02-02-2021 - Loans and Advances - House Building Advance - Migration of home loans taken by the Government servants from Banks / other Financial Institutions to House Building Advance - Guidelines and amendment to Rule 3 of State Rules to Regulate the Grant of Advances to Government Servants for Building Etc., of Houses - Issued...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...