கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிகரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...



 மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...


>>> Click here to Download G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... 


இவ்வாணையின் படி மகப்பேறு விடுப்பு 01-07-2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது...


01-07-2021க்கு முன்பு மகப்பேறு விடுப்பு தொடங்கி தற்போது விடுப்பிலிருக்கும் பெண் பணியாளருக்கும் இவ்வாணை பொருந்தும்...


(1.7.2021க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்...)


>>> 9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்...


அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேண்டும் - தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு


பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து 


செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக   


  அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு  நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு & ஓய்வு வயது 61 ஆக உயர்வு...

 தெலுங்கானாவில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. 


இம்மாநிலத்தின், 11வது ஊதிய கமிஷன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சி.ஆர்.பிஸ்வால் தலைமையில், 2018ல் உருவாக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை...



 🛑ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.


🛑இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:


'🛑'தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில், படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. தற்போது, தமிழக அரசுப் பணியிடங்கள் அவுட் சோர்ஸிங் முலம் பணியமர்த்தப்படுவதாலும், மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறு மாநிலத்தவர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் படித்த இளைஞர்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர்.


🛑இந்நிலையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தித் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.


🛑மேலும் இந்த அறிவிப்பானது, தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும். ஓய்வூதியப் பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகத் தெரிகிறது.


🛑தமிழகத்தில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளைப் பறிக்கும், எதிர்கால அரசுப் பணியெனும் கனவைச் சிதைக்கும் இந்த அறிவிப்பைத் தமிழக முதல்வர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்''.


🛑இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...

 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு?- இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

 


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி கரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது.


தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான கோப்புகள் முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இன்றே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...