கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 14.02.2021 (ஞாயிறு)...


🌹திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யக்கூடாது.

ஏனெனில் சில பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் நம்மை விட்டு விலகிவிடும்.!

🌹🌹சேரவும் முடியாது.

பிரியவும் முடியாது.

ஆனால் ஒன்றாகவே பயணிப்பது தண்டவாளங்கள் மட்டுமல்ல.

சிலரின் உறவும் தான்.!!

🌹🌹🌹பிறரின் ஏமாளி தனத்தை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த துரோகி ஆவான்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக மாநில அளவிலான 25 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி

திருச்சி மாநகரில் பிப்ரவரி மூன்றாவது வாரம் 

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம். நா.சண்முகநாதன் அறிவிப்பு.

⛑⛑உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் TNEMIS (0.034 Version) பதிவிறக்கம் செய்து app (EMIS Attendance app updated version) அதிலுள்ள school Prepardness மூலம் மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள்விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்களிலும் தவறாது பதிவு செய்தல் வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு                        

⛑⛑குஜராத் மாநிலத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

⛑⛑மத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில் Talent Search at School Level ( SI.No : 73.f ) எனும் செயல்பாட்டின் மூலம் திறனறிப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது

⛑⛑NMMS  தேர்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட்டை, நாளை  முதல் பதிவிறக்கம் செய்யலாம். 

⛑⛑பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்துதல் சார்பு-- அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம்

⛑⛑+2 பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 

⛑⛑ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு. பிப்ரவரி 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பா் 16-இல் தொடங்கி ஜன.23-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

⛑⛑சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அவகாசம் நீட்டிப்பு. விண்ணப்பிக்காத தனித்தோ்வா்கள் பிப்.22-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

⛑⛑திருச்சியில் நேற்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுக்கூட்ட முடிவு:-

👉CPS ரத்து செய்யப்பட வேண்டும்

👉இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மாற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து

இன்னும் 14 நாட்களுக்குள் சென்னையில் மாநாடு நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது.                                                 ⛑⛑தொடக்கக் கல்வியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் 10 ஆண்டு முடித்தவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் பள்ளிக்கல்வியில் முதுகலை பட்டதாரிகளாக நியமிக்க பரிந்துறைத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் பரிந்துரையினை 2 வாரத்திற்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் பரிசீலித்து அளிக்கும் பரிந்துரை மீது 2 வாரத்தில் முடிவெடுத்து உத்தரவிட பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவு.                                                                                 ⛑⛑எல்.எல்.எம்., படிப்பு 2022-2023ம் ஆண்டு முதல் ரத்து – இந்திய பார் கவுன்சில்

⛑⛑CPS-ரத்து "வல்லுநர் குழு" அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது - பரிந்துரைகளை அரசு பரிசீலித்து அரசாணைகள் வெளியிடும் - அரசு முதன்மை செயலாளர் கடிதம்

⛑⛑அனைத்து பாடங்களையும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

⛑⛑2020- 21 ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்த்தல் திறனறிப் போட்டிகள் நடத்துதல் - நிதி விடுவித்தல்  சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறை வெளியீடு.

⛑⛑தொடக்கப்பள்ளி - பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

⛑⛑10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும்,  மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் 

⛑⛑நீட், ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தமிழக அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை, அதனால், தனியார் உதவியுடன் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார். 

⛑⛑பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டத்தால், பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தின் வாயிற் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.                                                         ⛑⛑தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கும் வகையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றது மத்தியஅரசு

பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கும் வகையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தில் சட்டதிருத்ததை அறிமுகம் செய்தது மத்திய அரசு.

⛑⛑தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் கையை விட்டு ஆட்சி நழுவ போகிறது.

திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது.

கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கும்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சி - சிதம்பரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

⛑⛑மோடி அடிக்கல் நாட்டும் பிரதமராகவே இருக்கிறார்’

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி

⛑⛑தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக:

தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது 

சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்க கூடும், அதைபற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.

பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன் 

வைகோ.

⛑⛑வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கியதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑சட்டமன்றத் தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் அதிமுக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தமிழகத்தில் தோல்வியைத் தழுவும். மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வருக்கு மைனஸ் மார்க் மட்டுமே போட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑உதய் மின் திட்டத்தை ஆதரித்துவிட்டு இலவச மின்சாரம் எனக் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை முதல்வர் பழனிசாமி ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

⛑⛑ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்' என்ற  வசனத்தை மாற்றி கூறி திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார் - கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

திமுக ஆட்சியில் விருத்தாசலம் தனி மாவட்டம் ஆக்கப்படும்

⛑⛑திமுக-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை நாங்களாக வெளியேற்ற மாட்டோம்; பாரிவேந்தர் தனித்துப் போட்டியிடுவது அவரது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை  பிப்., 17ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் திரு உருவ வெண்கலச் சிலை மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்படுகிறது.

 பின்னர் ஒத்தக்கடையில் நடைபெறும் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களாக பெறுகிறார்.

⛑⛑விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் 29 பேரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.

⛑⛑முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள் தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் -  

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.

⛑⛑நியாயமான கோரிக்கைக்கும் போராடிய இளங்கீரனை போலீஸ் அராஜகமாககைது செய்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனக்கு நன்றி சொல்லும் எத்தனைப் பேரை கைது செய்வீர்கள்? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல; முதல்வர் பழனிசாமி தான் என ஸ்டாலின் கூறியுள்ளார்

⛑⛑உங்கள் மகனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது?: 

அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

⛑⛑சட்டப்பேரவை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினருடன் இணைந்து காவல்துறை களம் இறங்கி உள்ளது.

⛑⛑அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் 

சென்னை, வேலூர், தருமபுரி மண்டலங்களுக்கு பிப்.15, 16ல்,

கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, மண்டலங்களுக்கு 17, 18ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அழைப்பு.

⛑⛑இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி தொடக்கம்.

⛑⛑அலகாபாத் வங்கி இந்தியன் வங்கி இரண்டின் மென்பொருள் இணைப்பு வேளைகள் நடந்து கொண்டு இருப்பதால் பிப்ரவரி 15ம் தேதி வரை இந்தியன் வங்கி நெட் பேங்கிங் UPI மொபைல் பேங்கிங் ஏடிஎம் சேவைகள் கிடைக்காது என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

⛑⛑சின்னத்திரை நடிப்பிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அறிவிப்பு. தீவிர அரசியலிலும்,திரைப்பட நடிப்பில் மட்டுமே ஈடுபட முடிவு. சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிர் செயலாளராகவுள்ள இவர் தலைவர் சரத்குமாருடன் தமிழக முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.

⛑⛑தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.286,91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆந்திராவிற்கு ரூ.280.78 கோடியும், பீஹாருக்கு ரூ.1,255.27 கோடியும், ம.பி.,க்கு ரூ.1,280.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.

⛑⛑கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டையை மீண்டும் வழங்க தமிழக அரசு உத்தரவு.

⛑⛑மக்களவையில் முதல் அமர்வு அடுத்து மார்ச் 8-ம் தேதி வரை ஒத்திவைப்பு.

⛑⛑பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை கொடி மர இல்ல சாலை காவி சாலையாக மாறியது.

⛑⛑12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன்

ரத்து அறிவிப்பு; விவசாயிகளுக்கு நேற்று ரசீதை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

⛑⛑அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை; வெற்றிநடை போடுவதாக கூறும் தமிழகம், வெற்றுநடை போடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

⛑⛑முதல்வர் நிவாரண நிதி தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார்; துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதிலடி.

⛑⛑பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி; கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் தகவல்.

⛑⛑கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி திமுக, மநீம வழக்கில் பதில்தர அரசுக்கு இறுதி கெடு: உயர் நீதிமன்றம் உத்தரவு.

⛑⛑அதிவேகமாகப் பரவக் கூடிய புதுவகைக் கரோனா இலங்கையில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

⛑⛑வேளாண் சீா்திருத்தம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

⛑⛑அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை – பிப்.,15 வரை வாய்ப்பு                                  

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2007-08ல் தேர்வு செய்யப்பட்டு 2008-09 என்று பணிநியமன ஆணையில் குறிப்பிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சார்பான கருத்துருக்களை உடன் அனுப்ப விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...



 >>> விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (14-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். தூரத்து உறவினர்களின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அஸ்வினி : செலவுகள் உண்டாகும்.


பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


கிருத்திகை : அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.


ரோகிணி : லாபம் மேம்படும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பாதியில் நின்ற பணிகள் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களின் மீதான வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூசம் : சாதகமான நாள்.


ஆயில்யம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசும், பாராட்டுகளும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதுவிதமான சிந்தனைகளும், புதிய நபர்களின் அறிமுகமும் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : ஆதரவான நாள்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாறுபட்ட சூழ்நிலைகள் ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். நிதிநிலையில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் குழப்பங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்வது நல்லது. உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனவரவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.


அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.


கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

மனதில் இருக்கும் எண்ணங்களை அமைதியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு மறையும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். பயணங்களின் மூலம் பணவரவுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூராடம் : இன்னல்கள் மறையும்.


உத்திராடம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவருடன் பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். தொழில் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். புதிய முயற்சிகள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், கண்ணோட்டங்களில் மாற்றமும் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் :7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.


திருவோணம் : அலைச்சல்கள் மேம்படும்.


அவிட்டம் : புரிதல் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சதயம் : புத்துணர்ச்சியான நாள்.


பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 14, 2021


மாசி 02 - ஞாயிறு

கண்பார்வை தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களினால் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். பொதுக்காரியங்களில் உள்ளவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : பிரச்சனைகள் மறையும்.


உத்திரட்டாதி : குழப்பமான நாள்.


ரேவதி : லாபம் அதிகரிக்கும்

நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குதல் - சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 024036/ இ1/ 2017, நாள்: 16-02-2018...


Proceedings of the Director of Elementary Education  ந.க.எண்: 024036/ இ1/ 2017, நாள்: 16-02-2018...

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 024036/ இ1/ 2017, நாள்: 16-02-2018 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குதல் - இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுத்து அரசாணை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு - நகல்...

 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குதல் - இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுத்து அரசாணை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு - நகல்...

Madras High Court Judgement W.P.No.8211 of 2009, Date : 12-02-2021...

>>> Click here to Download Madras High Court Judgement W.P.No.8211 of 2009, Date : 12-02-2021...



ஊரக வளர்ச்சி துறை - பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு திடீர் ரத்து...

 


நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-02-2021...

 


>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...