கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வின் புதிய அட்டவணை வெளியீடு...

 


Tamilnadu Uniformed Services Recruitment Board announced New Schedule of Interview for the post of Sub Inspector...

>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு உதவி பெறும் கல்லூரி - 25 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் 11 கற்பித்தல் அல்லாத பணியாளர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-02-2021 ...


 Government Aided College - Assistant Professor - 25 Posts & 11 Non teaching Staffs - Govt salary - Last Date to Apply : 23-02-2021...

>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Whatsapp புகைப்படங்கள், வீடியோக்களால் Phone Memory Full ஆகாமல் தவிர்ப்பது எப்படி...?

 


உங்கள் Gallery Full ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை...

இனி யாரும் குரூப்பிலிருந்து  வெளியேற வேண்டாம்...             

                                  வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் காலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது.


கவலையை விடுங்கள்

இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ( Whatsapp ) குரூப் செயற்பாட்டுக்கு மட்டும் ஒரு  அம்சம்  உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கேலரியில் சேமிப்பு ஆகாமல் குழுவில் மட்டுமே பார்க்கலாம்.


 செயற்படுத்தும் படிமுறைகள்

1️⃣ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.


2️⃣ பின்பு GROUP INFO வை அழுத்தவும்.


3️⃣ அப்போது மூன்று வழி முறைகளை காண்பீர்கள்.


01. Mute Notification 

02. Custom 

03. Media Visibility 

 

4️⃣ இதில் Media Visibility ஐ அழுத்தவும், 


அதில்

 Default 

 Yes 

 No 

என்று காணப்படும், அதில் No வை அழுத்தி பின்னர் Ok பண்ணவும்.


இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கேலரியில்  சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே பார்க்கலாம். 

முகநூல் செயலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி...?



How to use Facebook App safely ...?

முகநூல் நம் விவரங்களை நாம் ஆஃப்லைனில் இருக்கும்போதும் 

Settings -> Off-Facebook Activity சென்றால், அந்த பகுதியில் நாம் என்னென்ன வலைதளங்களுக்கு சென்றோம், செயலிகள் உபயோகித்தோம் போன்ற விவரங்களை காணலாம். (அதை விளம்பரதாரர்களுக்கு கொடுக்க, அவர்கள் நம்மை தொடர்பு கொள்கிறார்கள்).

Settings -> Off-Facebook Activity -> Clear Historyஐ அழுத்தினால், அடித்த பக்கத்தில் மீண்டும் Clear Historyஐ அழுத்தி உறுதி செய்ததும், History அழிகிறது. (இனி விளம்பரங்கள் வராது - அடுத்த ஹிஸ்டரி சேரும் வரை)

அதோடு முடிவதில்லை இந்த விவகாரம். மேலும் ஹிஸ்டரி சேராமல் இருக்க, 

Settings -> Off-Facebook Activity -> More Optionsஇல் அழுத்தவும். அதையடுத்து வரும் பக்கத்தில், “Manage Future Actvity”ஐ அழுத்தவும். 

அடுத்த பக்கத்தில் மீண்டும் Manage Future Actvityஐ கொடுத்து  அழுத்தவும்.

இறுதியாக தோன்றும் பக்கத்தில், “Future Off-Facebook Activity”ஐ Off நிலைக்கு தள்ளவும். மீண்டும் “Turn-Off”ஐ அழுத்தி -  உறுதி செய்யவும். 

இனி நீங்கள் பாதுகாப்பாக முகநூல் செயலியைப் பயன்படுத்தலாம்...

ரூ.50,000 ரூபாய் TDS அல்லது TCS செலுத்தும் நபர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்...

 


ரூ.50,000 ரூபாய் டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் செலுத்தும் நபர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

    

IT Return

2021 மத்திய பட்ஜெட்டில் ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவர் பல வழிகளில் வருமானம் ஈட்டும்போது அவர் பெறும் தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. இது டி.டி.எஸ் (Tax Deducted at Source) எனப்படும். அது போல ஒரு வியாபாரி குறிப்பிட்ட பொருள்களை விற்கும்போது டி.சி.எஸ் (TCS -Tax Collected at Source) வசூல் செய்யப்படுகிறது 2021 மத்திய பட்ஜெட்டில் இது போல ரூ.50,000 ரூபாய் அளவுக்கு ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் அல்லது டி.சி.எஸ் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


அவ்வாறு அதிக டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் செலுத்திய நபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் அதிக அபராதம் விதிக்கப் படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அதிக ஊதியம் ஈட்டுபவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் நோக்கில் எடுக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 50,000 ரூபாய்க்கும் மேல் வரிப் பிடித்தம் அல்லது வரி வசூல் செய்யப்பட்டு இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், வழக்கமான அபராதத்தைவிட இரு மடங்கு தொகை அல்லது அவர்களின் அடிப்படை வருமான வரியைவிட 5% அதிகமான வரியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வரிக் கணக்கு தாமதமாகச் செய்யும்பட்சத்தில் ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர் ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் ரூ.10,000-மும் அபராதம் செலுத்த வேண்டும். 


ஆனால், மாத ஊதிய டி.டி.எஸ் அல்லது லாட்டரி போன்ற பரிசுத் தொகை கிடைப்பதன் மூலமாக டி.டி.எஸ் பிடித்தம் செய்யப் பட்டிருந்தால் இந்த அபராதத் தொகை செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நம்மில் பலர் ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்பு கணக்கு போன்ற வழிகளில் பணத்தை சேமித்து அதில் வட்டி பெற்றுக்கொண்டு இருப்போம். 


அதிக வாடகை போன்ற வழிகளில் வருமானம் பெறும்போதும் பொதுவாக வரி பிடித்தம் செய்யப்படும். இது போல பல வழிகளில் வரிப்பிடித்தம் நம்மிடம் செய்யப்படலாம். அவ்வாறு ஒரு வருட காலத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் வரிப்பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் இனி அசட்டையாக இருந்துவிடாதீர்கள். அப்படி இருந்தால் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்...

2020 -2021ஆம் ஆண்டு - மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள்...



2020-2021 - Government announced benefits for the  Differently abled...


இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...


 பள்ளிக் கல்வி - 2020-21ம் கல்வி ஆண்டு - இடைநிற்றலை (Drop out) முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (Special Incentive) - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...