கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று ...

 அரசு நடுநிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று 

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆவணத்தான்கோட்டை மேற்கில் 1936-ல் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பின்னர், 1986-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.


166 மணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி மாணவர்களுக்குத் தனி வாகனம், மாணவர்களுக்குக் காலை உணவு திட்டம், நேர்மை அங்காடி, நவீன கழிப்பறை, இறகுப் பந்து மைதானம், சிறுவர் பூங்கா, ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய வசதிகளுடன் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளியாகவும் உள்ளது. மேலும், தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், கணினி, ரோபோ, எழுத்துப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. 


எங்கு போட்டி நடந்தாலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கின்றனர். ஆசிரியர்களின் திறமைகளைப் பாராட்டி இப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கும் 'புதுமை ஆசிரியர்கள்' எனும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அண்மையில் வழங்கினார். 


 இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்குமாறு டெல்லியிலுள்ள ஒரு தரச்சான்று நிறுவனத்திடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து, பள்ளியைப் பல கட்டங்களாக அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். பின்னர், அந்நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச் சான்று பிப்.15-ஆம் தேதி வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சர்வதேச தரச் சான்று பெற்ற முதல் அரசு நடுநிலைப் பள்ளியாக ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி விளங்குகிறது. சர்வதேச தரச்சான்று பெறும் அளவுக்கு பள்ளியை உயர்த்திய ஆசிரியர்களைக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


 தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் சேர்ந்தது, பொதுத்தேர்வு முடிவில் தொடர்ந்து சிறப்பிடம், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் திறமையும் கொண்டுள்ளதோடு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றும் கிடைத்திருப்பது கல்விக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறுகையில், "தமிழக அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தியதால் கல்வித் தரமும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 


 இதன் அடிப்படையிலேயே தரச்சான்றும் கிடைத்துள்ளது. சிறந்த முறையில் செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை...


 குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில், பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை அறிய, மாதிரியை வெளியிட வேண்டுமென, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 


பொதுத்தேர்வுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால், வாரத்தின் ஆறு நாட்களும், மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கி, 21ல் முடியும் என, கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. 


 தேர்தல் மற்றும் கொரோனா பிரச்னையால், மார்ச்சில் நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வு, இரண்டு மாதம் தாமதமாக நடக்க உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான வினா மாதிரி எப்படி இருக்கும் என தெரியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


இந்த முறை, பாடத் திட்டம், 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வினாத்தாள் முறையிலும் மாற்றம் இருக்கும் என, பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.


அதனால், மாற்றம் என்பது, எப்படி இருக்கும் என, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டுமென, பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாணைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் - ஆங்கிலத்திற்கு தடை...

 


 தமிழக அரசின் ஆணைகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளில், அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தக் கூடாது; தமிழையே பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டப்படி, ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்பதால், விதிகள், விதிமுறைகள், ஆணைகள் மற்றும் விலக்கு அளிப்பட்டவை தவிர, மற்ற உத்தரவுகள், தமிழிலேயே பிறப்பிக்கப்பட வேண்டும்.


ஆனால், இந்த சட்ட த்தை மீறி, அரசாணைகள், கோப்புகள், பதிவேடுகள், சுற்றறிக்கைகள், தாக்கீதுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றில், தமிழை விட, ஆங்கிலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக, தமிழ் வளர்ச்சித் துறைக்கு புகார்கள் வருகின்றன. 


 இதுகுறித்து, அலுவலர்கள், துறை பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனமாக ஆவணங்களை கையாள வேண்டும்.அரசாணைகள், சுற்றறிக்கைகள், பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களில், தமிழ் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஆங்கிலக் கலப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வ.உ.சி. பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் நடைபெற்றது. 

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை முதல்வர் தான் அறிவிப்பார் என்றார். 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில் பணி செய்தால் ஈடுசெய் விடுப்பு (Compensatory Holiday) எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை 2218, நாள்: 14.12.1981...


விடுமுறை நாட்களில் பணி செய்தால் ஈடுசெய் விடுப்பு (Compensatory Holiday) எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான பொது (பல்வகை)த் துறையின் அரசாணை 2218, நாள் : 14.12.1981...

Eligible only to C & D Group Employees not to A & B Group...

>>> Click here to Download G.O.Ms.No.2218, Dated: 14-12-1981...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.02.2021 (திங்கள்)...

 


🌹ஒரு உண்மை பல பொய்களால் தோற்றுப்போனாலும் 

ஒரு நாள் உண்மை  பல பொய்களை தோற்கடித்தே தீரும்.!

🌹🌹சூழ்நிலை மாறும் போது

சிலரது வார்த்தைகள் மாறும்

ஏன் பலரது முகங்கள் கூட மாறும்.!!

🌹🌹🌹இன்றைய உலகில் உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான் நடிப்பவன் மதிக்கப்படுகிறான் 

ஏமாற்றுபவன் பாராட்டப்படுகிறான்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀ஆசிரியர் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்க: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை

🎀🎀அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

🎀🎀நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ. 30 கோடியில் ஆராய்ச்சி மையம்

🎀🎀வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக `சன்டேஸ்' அறிமுகம் செய்தது மத்திய அரசு

🎀🎀1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

🎀🎀தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ஜூன் மாதம் நடத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை 

🎀🎀பள்ளிக் கல்வி - 2020-21ம் கல்வி ஆண்டு - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 

மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு

🎀🎀டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களை பணித்தேர்வில் நிராகரிப்பது தவறில்லை என உத்தரவிட்டுள்ளது

🎀🎀1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு

🎀🎀தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை                                            

🎀🎀2009 - க்கு பின்னர் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு

சம ஊதியம் வழங்க வேண்டும்:சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

🎀🎀நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக உள்ள 57 வயதை கடந்த வர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும் நாளிதழ் செய்தி

🎀🎀பிப்ரவரி 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

காங்கரஸ் ஆட்சியில் ரூ.71-க்கு விற்ற பெட்ரோல் தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

🎀🎀அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி

மு.க.ஸ்டாலின்

🎀🎀இன்று நடைபெற இருந்த பாமக சிறப்பு பொதுக்குழு 25-ந் தேதிக்கு மாற்றம்

ஜிகே மணி அறிவிப்பு

🎀🎀திருச்சி சிறுகனூரில் மார்ச் 14ம் தேதி திமுக மாநாடு நடைபெறும் இடம் மட்டும் 369 ஏக்கராகும். திமுக மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 400 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக 400 சிற்றுண்டி கடைகள், 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 77 திமுக மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்பதால் 77 தனித்தனியான இடங்கள், போக்குவரத்துக்காக சாலைகள் அகலப்படுத்தியதோடு புதிய சாலைகள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் 22ம் தேதி துவங்கி 10 நாட்களில் முடிவடைந்து விடும். 

இதுவரை நடந்த திமுக மாநாட்டிலேயே அதிக பரப்பளவில் அதாவது 700 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் திறந்தவௌி மாநாடாக இது அமையும்

முதன்மை செயலார் கே.என்.நேரு

🎀🎀தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி முடிவு குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதியில் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். மேலும், தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தலைமை தேர்தல் ஆணையம், துணை ஆணையர்கள் குழு கூடுகிறது.

🎀🎀திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்துவதா? - ராமதாஸ் கடும் கண்டனம்:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது!

🎀🎀காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கண்துடைப்பு வேலை:

ப.சிதம்பரம்

🎀🎀திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, மீண்டும் பழனிசாமி துவக்கி வைத்து, புதிய திட்டம் போல மக்களை ஏமாற்ற நினைக்கிறார்

மு.க.ஸ்டாலின்

 🎀🎀மார்ச் 1ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

முதன்மை செயலாளர் கே.என்.நேரு தகவல்

🎀🎀கோவையில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் காலி சேர்களை படம் பிடித்த  செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர். மேடைக்கு வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்குதல் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

🎀🎀2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

🎀🎀வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தருவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்.

🎀🎀காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு  டிராக்டரில் பவனி வந்து  புதுக்கோட்டையில் நேற்று அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

🎀🎀அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியில் தான் தகவல் பரிமாற்றம்.

எந்த மாணவர் மீதும், எந்த மொழியும் திணிக்கப்படாது.

மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்.

🎀🎀தொடர் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 22.02.2021 விடுமுறை 

-புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கம்

🎀🎀ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாகப் பணி: செங்கோட்டையன்

🎀🎀ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

-காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு.

🎀🎀இந்தியாவை விட அருகாமை நாடான நேபாலில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதால் மக்கள் எல்லையை கடந்து சென்று பெட்ரோல் வாங்கிவருகின்றனர்.

🎀🎀நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன்.

🎀🎀திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூதுவிடுவதையெல்லாம் கருத்தில் கொள்ள முடியாது.தலைமையிடம் இருந்து அழைப்பு வர வேண்டும்.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

🎀🎀இளைஞர்களே வாருங்கள் புதிய தமிழகத்தை படைக்கலாம்.

நான் மட்டும் ஊழலை ஒழிப்பது சாத்தியம் இல்லை. எல்லா இளைஞர்களும் ஒன்றாக வாருங்கள் ஊழலை ஒழிக்கலாம்

- சகாயம் ஐஏஎஸ்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (22-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குவன்மையால் லாபம் அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பழைய தொழிலாளர்களை மாற்றுவீர்கள். நண்பர்களுடன் கூடி பேசி மனம் மகிழ்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருப்திகரமான தனவரவுகள் உண்டாகும். பேச்சுத்திறமையால் புகழப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சி உண்டாகும்.


பரணி : சாதகமான நாள்.


கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். முக்கியமான முடிவுகளை ஆலோசனைகள் செய்து எடுக்கவும். பணி தொடர்பான இடமாற்றம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். நிதானமான செயல்பாடுகளால் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் மறைமுக எதிரிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.


ரோகிணி : குழப்பங்கள் ஏற்படும்.


மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

அறிமுகமில்லாத புதிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களின் மூலம் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் உண்டாகும். உடல் சோர்வினால் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.


புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மதிப்புகள் உயரும். முக்கியமான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனதளவில் பலவீனமாக காணப்படுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்துகள் போடுவதில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வெளியூர் தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சுபச்செய்திகளின் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த பணத்தட்டுப்பாடு குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : கலையறிவு அதிகரிக்கும்.


உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகளில் தனித்திறமைகள் புலப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : தனித்திறமைகள் புலப்படும்.


அஸ்தம் : லாபம் உண்டாகும்.


சித்திரை : முன்னுரிமை கிடைக்கும். 

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் செலுத்த வேண்டும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நிதானமான வாதங்களின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதைரியம் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : வேகம் அதிகரிக்கும்.


சுவாதி : மனவருத்தங்கள் நீங்கும்.


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். கோபத்தை குறைப்பது நன்மையளிக்கும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : அமைதி வேண்டும்.


கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி தொடர்பான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

பொருளாதார மேன்மை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறு ஞாபகமறதி உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய தடைபட்ட வேலைகளை செயல்படுத்தவும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


திருவோணம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அவிட்டம் : வெற்றி கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

பூர்வீக சொத்துக்களினால் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கால்நடைகள் வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய லாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 22, 2021


மாசி 10 - திங்கள்

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். போக்குவரத்தால் லாபம் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மனதில் எண்ணிய செயல்களை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.


ரேவதி : தடைகள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...