கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெங்களூரில் 3 நாட்கள் பணியிடைப் பயிற்சி - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 பள்ளிக் கல்வி –ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 8761/ 2/ 1/ 2021, நாள்: 25-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 8761/ 2/ 1/ 2021, நாள்: 25-02-2021...


EMIS – இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் – தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


EMIS – இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் – தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 04577/ ஜெ2/ 2020 , நாள்: 25-02-2021...

>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 04577/ ஜெ2/ 2020 , நாள்: 25-02-2021...


9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு...

 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார் 


இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி  கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது . மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது. மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...



DEO பதவி உயர்வு – தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - திருத்தப்பட்ட புதிய உத்தரவு...

 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தலைமையாசிரியை மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் அளித்து ஆணை வழங்கியது – திருத்திய ஆணை வழங்குதல் சார்பு...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34554/ அ1/ இ1/ 2020, நாள்: 24-02-2021...


10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


 10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4571/ ஈ2/ 2020, நாள்: 25-02-2021 & All India Radio Time Schedule...

>>> SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4571/ ஈ2/ 2020, நாள்: 25-02-2021 & All India Radio Time Schedule...


மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

 வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டாட்சியர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...



ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை...



 🛑ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.


🛑இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:


'🛑'தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில், படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. தற்போது, தமிழக அரசுப் பணியிடங்கள் அவுட் சோர்ஸிங் முலம் பணியமர்த்தப்படுவதாலும், மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறு மாநிலத்தவர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் படித்த இளைஞர்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர்.


🛑இந்நிலையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தித் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.


🛑மேலும் இந்த அறிவிப்பானது, தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும். ஓய்வூதியப் பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகத் தெரிகிறது.


🛑தமிழகத்தில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளைப் பறிக்கும், எதிர்கால அரசுப் பணியெனும் கனவைச் சிதைக்கும் இந்த அறிவிப்பைத் தமிழக முதல்வர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்''.


🛑இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...