கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...
கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை -
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.
ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசியின் இந்திய வடிவமே கோவிஷீல்டு என்பதை அனைவரும் அறிவோம்.
ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட்டாக இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை
பிரேசில்,
அமெரிக்கா,
பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தி வருகின்றன.
ஆய்வின் இடைக்கால முடிவுகளை அவ்வப்போது நவீன மருத்துவ உலகின் பெயர்பெற்ற "லான்சட்" மருத்துவ இதழில் அப்டேட் செய்கிறார்கள்.
இந்த மூன்றாம் கட்ட ஆய்வின் லேட்டஸ்ட் அப்டேட் 6.3.2021 அன்று வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வு முடிவில் முதல் டோஸ் கோவிஷீல்டுக்கும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கும் இடையே 12 வாரங்கள் இடைவெளி விடும் பொழுது தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 81.3% என்றும்,
அதே இடைவெளியை 6 வாரங்களுக்குள் சுருக்கினால் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 55.1% என்ற அளவில் குறைகிறது என்றும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுதனை பறைசாற்றுமாறு பிரிட்டன் அரசாங்கமும் கனடா அரசாங்கமும் அவர்களது நாட்டில் இரு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை 90 நாட்கள் என்று நிர்ணயம் செய்துள்ளனர்.
இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கும் குழு, இது குறித்து பிப்ரவரி மாத மத்தியில் கலந்தாலோசனை செய்தது.
ஆலோசனையின் முடிவில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பழைய முறைப்படியே 28 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதிகபட்சம் கூடுதலாக இரண்டு வாரங்கள் , அதாவது 42நாட்களுக்குள் தடுப்பூசி பெற வலியுறுத்துகிறது.
தடுப்பூசியை கண்டறிந்து ஆய்வு நடத்தி வரும் நிறுவனம் 12 வாரம் வரை இரண்டாவது டோஸ் ஊசியை தள்ளி வைத்தால் நோய் தடுக்கும் திறன் 81.3% என்று கூறியுள்ள போதிலும்,
இந்த இடைவெளியை ஆறு வாரங்களுக்குள் சுருக்கினால் நோய் தடுக்கும் திறன் 55.1%ஆக குறைகிறது என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் போதிலும்,
இந்தியாவின் கோவிட் தடுப்பூசி பரிந்துரைக் குழு தொடர்ந்து 28 நாட்கள் இடைவெளியை பரிந்துரை செய்து வருகின்றது.
இதற்கான காரணமாக குழு கூறுவது யாதெனில் "இந்தியாவில் தடுப்பூசிக்கு எந்த பஞ்சமுமோ தட்டுப்பாடோ வராது. இங்கு தான் பெரும்பான்மை தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே 28 நாட்களுக்குள் தடுப்பூசி போடுவது சிறந்தது."
மேலும் கூறுவதாவது
"ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டால் குறைவான எதிர்ப்பு சக்தியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இரண்டாவது ஊசியை உடனே அதாவது நான்கு வாரத்துக்குள் செலுத்திக்கொள்வது தான் சரி" என்கிறது. ( அறிவியல் ஆய்வோ ஒரு டோஸ் போட்டு 22வது நாளில் இருந்து 90 வது நாள் வரை சிறந்த எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்று கூறுகிறது)
இருப்பினும்,
உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்டு குறித்த இடைக்கால வழிமுறைகளை 10.2.2021 அன்று வழங்கியது.
அதில் கோவிஷீல்டின் இரு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 8 முதல் 12 வாரங்களுக்குத் தள்ளிப்போடுவது நல்ல வழிமுறை என்று கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து வழிமுறைகளைக் கூறும் வல்லுனர் குழுவில் இந்திய வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற முன்கள மருத்துவ ஊழியர்களில் பெரும்பான்மையினர் தங்களது இரண்டாவது டோஸ் ஊசியை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தள்ளிப்போட்டு வருகின்றனர் என்று செய்திகளும் கள நிலவரமும் கூறுகின்றது.
பொதுமக்களாகிய அனைவரும் இந்திய கோவிட் தடுப்பூசி நெறிமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இரண்டாவது டோஸ் 28 நாட்களில் போடுவது சிறந்தது என்று கருதினால் அப்போது போட்டுக்கொள்ளுங்கள்.
நிகழ்கால அறிவியலின்படி, 42 நாட்களுக்குள் இடைவெளியை சுருக்கினால் Efficacy 55.1% என்றும்
இடைவெளியை 84 நாட்கள் வரை நீட்டினால், 81.3% efficacy என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இத்தகையதோர் ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது எனத் தெரிவிப்பது மட்டுமே எனது பணி.
எனக்கான இரண்டாவது தடுப்பூசியை இந்த ஆய்வு வருவதற்கு முன்னமே எடுத்து விட்டேன். ஆயினும் இரண்டாவது டோஸ் இனிமேல் எடுக்க இருக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு குறித்தும்,
இந்திய அரசின் தடுப்பூசி வழிமுறை குழுவின் வழிகாட்டுதல்களையும் கூறிய திருப்தியில் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
இரண்டாவது டோஸ் தள்ளிப்போடுவது குறித்த வழக்கில்,
கற்றறிந்த சான்றோர் இடம்பெற்றுள்ள இந்திய கோவிட் தடுப்பூசி வழிமுறைக் குழுவின் தீர்ப்பே இங்கு இறுதியானது.
அவர்கள் 28 நாட்கள் என்று தொடர்ந்து கூறிவருவதால் (அறிவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் இக்குழுவினரின் இந்த தீர்ப்புக்கு நேரெதிராக இருந்தாலும்)
மக்கள் அனைவரும் அதை கடைபிடித்தாக வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
ஆயினும் பல மருத்துவ முன் கள ஊழியர்கள் நிகழ்கால அறிவியலை மதித்து தங்களுக்கான இரண்டாவது டோஸை தள்ளிப்போட்டுவருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.
சிந்தியுங்கள்
சிந்திப்போரே சிறந்தவர்கள்
நன்றி...
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
ஆதாரங்கள்
1. Phase III இடைக்கால முடிவு லான்சட்
https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00528-6/fulltext
2. https://apnews.com/article/uk-study-2nd-virus-vaccine-shot-delay-53c40e579c3209a77ffc6ca798aff1a7
3. https://beta.ctvnews.ca/local/london/2021/3/9/1_5340124.html
4. https://beta.ctvnews.ca/national/coronavirus/2021/3/3/1_5331577.html
ஒரே அரசுப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று - 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு...
மன்னார்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 6-ம் தேதி கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள் அனைவரும் சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, பள்ளியில் பயிலும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 300 பேருக்கு கடந்த 8-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது நேற்று தெரியவந்தது.
இதையடுத்து, 11 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால், அப்பள்ளியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி...
பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டும் பள்ளிகளில் சேர்க்கை வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024ஆம் ஆண்டு வரை, பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் காலதாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்...
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள இடங்களில் அவர்களின் கடமைகள்...
வாக்குப் பதிவு அலுவலர் 1 :
இவரிடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும். வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.
வாக்குப் பதிவு அலுவலர் 2 :
வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும் புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில் , அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும்.
அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு, வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும்.
வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி, வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு உண்டு.
ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல் இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர் வாக்குப் பதிவு அலுவலர் 2B என்று அழைக்கப்படுவார் ) ( 25/10/2007 நாளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதம் ) 731
வாக்குப் பதிவு அலுவலர் 3
கட்டுப்பாட்டு கருவிக்கு பொறுப்பாவார். அவர் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் துண்டுச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இடப்பட்டுள்ள அழியா மையை சரிபார்க்க வேண்டும் . முக்கியமாக கட்டுப்பாட்டு கருவியிலுள்ள வாக்குப் பதிவு பட்டனை அழுத்தி வாக்குப் பதிவு அடைப்புப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவுக் கருவியை வாக்களிக்க தயார் நிலையில் வைத்து , வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிக்குள் செல்ல வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு (01-01-2020) ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வும் கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் (01-07-2021) முதல் உயர்த்தி வழங்கப்படும் - மத்திய அரசு...
1.1.2020, 1.7.2020 மற்றும் 1.1.2021 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) மூன்று தவணைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முடக்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் தேவைப்படும் நிவாரணமாக என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் நிலுவையில் உள்ள மூன்று தவணை அகவிலைப்படி (டிஏ) எப்போது, எப்போது முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் உறுதியளித்தது.
அந்த ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை "2021 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் அடங்கும்" என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில், நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதற்கு உதவிய மூன்று தவணை டி.ஏ.வை முடக்குவதிலிருந்து அரசாங்கம், 4 37,430.08 கோடிக்கு மேல் சேமித்துள்ளது என்றார்.
1.1.2020, 1.7.2020 மற்றும் 1.1.2021 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தின் (Dearness Relief) மூன்று தவணைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முடக்கப்பட்டன என்று கூறினார்.
மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 17% டி.ஏ.வை கடந்த ஆண்டு ஜனவரியில் 4% அதிகரித்து 21% ஆக உயர்த்த ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், COVID-19 நெருக்கடியால் 2021 ஜூலை வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (டிஏ) நிறுத்தி வைக்க நிதி அமைச்சகம் 2020 ஏப்ரலில் முடிவு செய்தது.
தற்போது 2020 ஜனவரி 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப்படி (Dearness Allowance) (டிஏ) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (Dearness Relief) (டிஆர்) கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 ஜூலை 2020 மற்றும் 1 ஜனவரி 2021 முதல் டிஏ மற்றும் டிஆரின் நிலுவைத் தொகை(Arrear) கொடுக்கப்படாது "என்று நிதி அமைச்சகம் ஒரு குறிப்பில் கூறியுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...