12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021முதல் 23.04.2021வரை நடத்தப்பட உள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 16.04.2021முதல் 23.04.2021வரை நடத்தப்பட உள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்கக அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்?
இது குறித்து எனது விரிவான விளக்கம்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
டென்மார்க் நாட்டில் ஆஸ்ட்ரா செனிகா/ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முப்பது லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுள் 22 பேருக்கு அசாதாரண ரத்த உறைதல் ஏற்பட்டிருப்பதாகவும்,
அவர்களுள் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் முகமை எடுத்துரைத்தது.
இதனை கருத்தில் கொண்டு அந்நாடு வருகிற 14 நாட்களுக்கு AZD1222 தடுப்பூசி வழங்குதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி( TEMPORARY SUSPENSION) வைத்து , நிகழ்ந்த இந்த ரத்த உறைதல் சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஆணை பிறப்பித்துள்ளது.
TEMPORARY SUSPENSION/ ENQUIRY என்பது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தால் காவல் துறையினர் ACQUIST என்பார்களே அது போன்று என்று கருத்தில் கொள்ள வேண்டும்.
சந்தேகத்தின் பேரில் வழக்கு தொடுத்து கைது செய்து விசாரிப்பார்கள். பிறகு நீதி விசாரணை நடைபெறும். அதன் பிறகு தீர்ப்பு ÇONVICT என்று வந்தால் தான் அவர் குற்றவாளி ஆகிறார். எனவே AZD1222 தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிரந்தநமாக தடை செய்து விட்டது என்று செய்தி பரவினால் அதை ஒதுக்கி விடுங்கள். அது புரளி.
டென்மார்க்கை தொடர்ந்து ஐஸ்லாந்து , நார்வே ஆகிய நாடுகளும் தற்காலி நிறுத்த ஆணை பிறப்பித்துள்ளன
மொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஐம்பது லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு இதுவரை 30 ரத்த உறைதல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ கட்டமைப்பும் சரி.. அவர்கள் பக்கவிளைவுகளை பதிவு செய்து பராமரிக்கும் முறையும் சரி மிகவும் சிறப்பானது.
எனவே அந்த நாடுகளில் இத்தகைய பக்கவிளைவுகள் துல்லியமாகக் கண்டறியப்படுவதில் வியப்பேதுமில்லை.
இதய ரத்த நாள அடைப்பு
மூளை ரத்த நாள அடைப்பு
நுரையீரல் ரத்த நாள அடைப்பு
கால்களின் ஆழ் சிறை அடைப்பு
போன்றவை அதீத ரத்த உறைதலால் நிகழ்பவை.
ஆயினும் ஒரு நாட்டில் மேற்சொன்ன நிகழ்வுகள் தடுப்பூசி போடப்படாத சூழ்நிலையிலும் கூட அனுதினமும் முதியோர்களுக்கு, 45+ மக்களுக்கு நடந்தேறி வருகின்றன.
உதாரணம் கூறுகிறேன்
அதாவது ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் மொத்தம் 3650 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்று கடந்த ஐந்து வருட ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால்
அங்கு சராசரியாக தினமும் 10 பேர் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று அர்த்தம்
அந்த பத்து பேரில் 5 பேர் 65+ வயதினர்
3 பேர் 45+ வயதினர்
2 பேர் 45 வயதுக்குள் என்று ஆவணங்கள் கூறினால் அதை ஒரு பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை Normally Expected Events என்போம்.
மற்றொரு பக்கம், தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட மருந்து வழங்கப்பட்டவர்களில் நிகழ்ந்துள்ள மொத்த மரணங்கள் எவ்வளவு? என்று பார்க்க வேண்டும்
தடுப்பூசி வழங்கப்பட்ட மக்கள் தொகையில் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கிறது என்றால் அந்த மரணங்களை ஆய்வுக்குட்படுத்தி அவை முதலில் தடுப்பூசியின் நேரடி விளைவால் நடந்தவை தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும்
இதற்கு மருத்துவ ஆய்வு / பிரேதக்கூறாய்வு போன்றவை துணை நிற்கும்.
அதற்கடுத்த படியாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் நிகழ்ந்த மரணங்கள் ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்படும் EXPECTED DEATHS தை தாண்டுகின்றனவா? என்று பார்க்க வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசி பெறப்பட்டவர்களில் அதிகமாக மரணங்கள் நிகழ்வு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த தடுப்பூசி தடை செய்யப்படும். இதை EXCESS DEATHS THAN EXPECTED என்று கூறுவோம்.
டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியனின் சில நாடுகள் சேர்த்து 50லட்சம் டோஸ்களில் 30 ரத்த உறைதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது அந்நாடுகளின் Expected events அளவுக்குள் தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதற்கடுத்த படியாக தடுப்பூசிக்கும் இத்தகைய விளைவுகளுக்கும் தொடர்பு உள்ளனவா என்பதை அறிய CAUSALITY ANALYSIS செய்யப்படும்
அதில் இந்த தடுப்பூசியை வழங்கும் ஏனைய நாடுகளில் இது போன்ற விளைவுகள் தோன்றுகின்றனவா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை இந்தியாவில் இரண்டரை கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது
ஆயினும் ஓரிரு இடங்கள் தவிர்த்து
தடுப்பூசியினால் தொடர்ந்து கொத்து கொத்தாக மக்கள் தீவிர பக்க விளைவுகளுக்கு உள்ளானார்கள் என்று செய்தியில்லை. அதுவே உண்மையும் கூட.
இந்தியாவில் கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதிக பட்சம் தலைவலி, காய்ச்சல், கைகால் வலி மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பேருக்கு ஏற்படுகின்றது.
எனவே இந்திய மக்கள் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதைப் பார்த்து அச்சப்படத்தேவையில்லை.
மேற்சொன்ன அனைத்து ஆய்வுகளையும் வட சிறந்த ஆய்வு
RISK Vs BENEFIT ANALYSIS
அதாவது ஒரு செயலை செய்வதால் ஏற்படும் தீமை
அதை செய்யாமல் விட்டால் அடையும் தீமையை விட குறைவாக இருந்தால்
அந்த செயலை செய்யத்தான் வேண்டும்.
ஹெல்மெட் போட்டு நீண்ட தூரம் பைக் ஓட்டினால் தலை முடி கொட்டுகிறது.
தலைவலி வருகிறது.
ஆனால் இந்த தீமைகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி அடிபட்டால் தலையில் பலத்த காயம் பட்டு மரமணடையும் தீமை நடக்கலாம்.
அதே போல
கொரோனா தடுப்பூசி பெறுவதால்
ஏற்படும் காய்ச்சல் / உடல் வலி போன்ற சிறு தீமைகளை பொறுத்துக்கொள்வது
தீவிர கொரோனா ஏற்படுவது
கொரோனா மரணங்கள் ஏற்படுவது போன்ற பெருந்தீமைகளில் இருந்து காத்துக்கொள்ளத் தான் என்ற எண்ணம் வேண்டும்.
மீண்டும் இரண்டு வாரங்களில் அந்த நாடுகள் ஆய்வை முடித்து மீண்டும் AZD1222 தடுப்பூசியை வழங்கும் பணிகளை தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவில் வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிக்கும் தற்போது வரை பாதுகாப்பு தன்மை மிக்கவையாகவே ஆய்வு முடிவுகளின் படியும் கடந்த இரண்டு மாத கால அனுபவங்களின்படியும் விளங்குகின்றன.
எனவே, அச்சமின்றி தடுப்பூசி பெற முன்வாருங்கள்
அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று இலவசமாக தடுப்பூசியை பெற்றிடுங்கள்.
நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததால் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கடந்த புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு மதியம் 1 மணி வரை வந்து சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி நடத்தப்பட்டன. அதன்பின்னர் அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். மகே மற்றும் ஏனம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள்.
பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 “முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1 ஏப்ரல் 2021 முதல் தொடங்கும். இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 மற்றும் 12 வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day...
ELECTION 2021: TRAINING MANUAL AND CHECKLIST FOR ZO & PrO...
Duties and Responsibilities of the Presiding Officer...
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் :
* வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது . உதாரணமாக 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 15 வேட்பாளர்கள் + ஒரு Nota ) , 31 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 31 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 47 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மூன்று வாக்குப் பதிவு இயந்திரமும் ( 47 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் நான்கு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 63 வேட்பாளர்கள் - ஒரு Nota ) பயன்படுத்தப்படும்.
* பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இயந்திரந்தின் வலது புறத்தின் மேல்புறத்தில் உள்ள Scrolling Switch ல் எண்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.
* வாக்காளர் பட்டியல் நகல் ( Marked Copy / Reference Copy ) களில் அனைத்து பக்கங்களும் தொடர் எண் 1 முதல் வரிசையாக எண்ணிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
* குறிப்பாக வாக்குச் சாவடி வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் நகல்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக உள்ளனவா என்பதையும் அவை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரியதுதானா என்பதையும் துணைப்பட்டியல்களுடன் கூடியதுதானா என்பதனையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டோர் குறித்த குறிப்புகள் ( PB , EDC , SV , AVSC AVPWD . AVCO ) தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* வாக்காளர் பட்டியலில் மையினால் கையொப்பமிட்ட சான்றிதழ் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் மேல் ( Marked Copy ) இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
• ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகளில் ( Tendered Ballot Papers ) உள்ள தொடர் எண்கள் சரி பார்க்கப்பட வேண்டும் . . போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்களின் மாதிரி கையொப்ப நகல் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும் . இது வாக்குச் சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள வேட்பாளரின் கையொப்பத்தினை சரிபார்த்துக்கொள்ள உதவும்.
* வாக்குப் பதிவு முடியும் வரை , வாக்குப் பதிவின் போது குறிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் நகலினை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல வாக்குச் சாவடி 19 முகவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது . வாக்குச் சாவடிக்கு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலின் நகலினை , ( Relief ) மாற்று முகவரிடமோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலவலரிடமோ கொடுக்க வேண்டும்.
* பச்சைத்தாள் முத்திரையை ஒட்டுவதற்கு முன் , தான் முத்திரையின் வெண்மைப் பகுதியில் வரிசை எண்ணை அடுத்து , கீழே வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அவருடைய முழு கையெழுத்தை இட வேண்டும் . அதில் , கையொப்பமிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
* பச்சைத்தாள் முத்திரையின் ( Green Paper Seal ) வரிசை எண்ணை வாக்குச் சாவடி தலைமை அலுவலரும் குறித்துக்கொண்டு முகவர்களையும் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .
* வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன் , கார்டுலெஸ் போன் , வயர்லெஸ் செட் ( வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தவிர ) பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
>>> Click here to Download - TN Election 2021 - Presiding Officers Training Booklet (PDF)...
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...