கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு - வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அரசு அறிவிப்பு...



கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்று முதல் நேரடி வகுப்புகள் கிடையாது. வாரத்தில் 6 நாட்கள் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை மார்ச்31-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு  விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல வகுப்பு நடைபெற்று வருகிறது.




மாணவர்கள் குழப்பம்


கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.


இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு  (மார்ச் 23) முதல் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வாவுடன் ஆலோசனை செய்தார்.


தீவிர ஆலோசனை


அப்போது அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது.


மாணவர் நலன் கருதி..


கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், அவர்களின் நலன் கருதி உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் (கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள்), அனைத்துநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மார்ச் 23-ம் தேதி  முதல் இணையவழி வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கலை அறிவியல், பொறியியல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு குறிப்பாக இறுதிப் பருவ மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள், செய்முறைத் தேர்வுகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த பருவத்துக்கான தேர்வுகளை இணையவழியில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பான அரசாணையும் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



இதுவரை சென்னையில் 2 லட்சத்து 34,702 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 47,139 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 261 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 659 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 3,211 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,609ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,202 பேர் இறந்துள்ளனர்.


தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 42,115,கோவையில் 57,267, செங்கல்பட்டில் 54,469, திருவள்ளூரில் 45,176 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 259 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 88 லட்சத்து 54,356 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 73,247 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதக்கூடிய நிலைமை இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான இணைப்புகள் திறக்கப்பட்ட 3 மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மையங்கள் நிரம்பின. எனவே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால் மற்றவை என்று குறிப்பிட வேண்டும் என்றும் அதை பரிசீலித்து மாநிலத்திற்குள் தேர்வு மையங்கள் தேவைப்பட்டால் ஒதுக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த ஆண்டே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்காவிட்டாலும் அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்திலேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் கூடுதல் மையங்களை அடுத்தாண்டாவது உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்...

மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து...

 


தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை அமலில் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. 


தமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்க்கு கல்லூரியும், ஜனவரி 19ம் தேதி முதல் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்க அனுமதியளித்தாலும் அரசு நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது. 


தற்போது தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரியை சேர்ந்த 345 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

``பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...

 தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது!


கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.



அப்போது அவர் பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு என அறிவித்திருந்தார்.


அதாவது, தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் EPF  உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய பி.எஃப் தொகை மற்றும் விருப்ப பி.எஃப் (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.


இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதன் மீது 127 திருத்தங்கள் கூறப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிதி மசோதா நிறைவேறியது.



இந்தக் கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், "தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். இதனால் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள், பெரிதும் பலனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.


மேலும் அவர், "பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் ஒத்துழைப்பு கொடுங்கள் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்...



சாதாரண காய்ச்சல் இருந்தாலும் மருத்துவமனைக்கு வர வேண்டும். நான்கு நாட்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை பிராட்வேயில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தது காரணமாக மட்டுமே கொரோனா பரவல் கட்டிக்குள் வந்தது.


தற்போது, மீண்டும் அதனை மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். தினசரி சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சாதாரண காய்ச்சல் இருந்தாலும் மருத்துவமனைக்கு வர வேண்டும். சாதாரண காய்ச்சல் தான் என்று நினைத்து சாதாரண மருந்துகளைசாப்பிட்டு, மூன்று மற்றும் நான்கு நாட்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படும்.


பெரும்பாலும் எங்களை பார்த்தவுடன் பலரும் முகக்கவசம் அணிந்துகொள்கிறார்கள். நாங்கள் இல்லையென்றால் முகக்கவசம் அணிவதில்லை. இந்நிலை மாற வேண்டும். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 10 நாட்கள் மக்கள் சுகாதாரத்துறைக்கு கடுமையாக ஒத்துழைத்தால் தற்போது அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். " என்று தெரிவித்தார்.

இன்றைய (25-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து லாபம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் அமையும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : துரிதம் உண்டாகும்.


பரணி : நெருக்கடிகள் குறையும்.


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். உடன்பிறந்தவர்களிடம் நிதானமாக செயல்பட்டால் காரிய அனுகூலம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.


ரோகிணி : இழுபறிகள் அகலும்.


மிருகசீரிஷம் : காரிய அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக மறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கருத்துக்களை பரிமாறும் பொழுது சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.


பூசம் : மேன்மை ஏற்படும்.


ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், அறிமுகமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : குழப்பங்கள் அகலும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாரிசுகளின் மூலம் தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : சாதகமான நாள்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். திடமான சிந்தனையுடன் எதிர்காலம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : ஒற்றுமை உண்டாகும்.


கேட்டை : புத்துணர்ச்சி ஏற்படும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட பணிகள் காலதாமதமாக நடைபெறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திராடம் : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்குவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உபரி வருமானம் மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் உண்டாகும். முன்கோபமின்றி செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : கலகலப்பான நாள்.


திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதை உறுத்திக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : பொறுமை வேண்டும்.


சதயம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 25, 2021


பங்குனி 12 - வியாழன்

மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


உத்திரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.


ரேவதி : மாற்றமான நாள்.

---------------------------------------


கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - ஏப்ரல் 1 முதல் அமல்...



கொரோனா அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 40,000திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத்தில் தியேட்டர்கள் செயல்படுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே இருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான தனிநபர் நகர் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது. பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.



ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய ரீதியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் அனைவரும் முகக்கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி முழுமையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...