கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல் 2021 - மாதத்தில் உள்ள வங்கி விடுமுறை நாட்கள்...

 


விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், முக்கியமான வங்கி பணிகளை முடிக்க திட்டமிடும் முன் இதை செய்வது அவசியம்.


வங்கிகளில் முக்கியமான வேலைகளை முடிக்க திட்டமிடும் மக்கள் அதற்கு முன் வங்கிக்கு விடுமுறை நாட்கள் என்றெல்லாம் வருகின்றன என்பதை சரிபார்த்து திட்டமிட வேண்டும். 


மற்ற மாதங்களை காட்டிலும் இந்த எப்ரல் மாதத்தில் வங்கிகள் அதிக நாள் விடுமுறையால் மூடப்பட உள்ளது. பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்த நாள், பிஹு, புனித வெள்ளி, ராம் நவ்மி, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட சில பண்டிகைகள் வங்கி விடுமுறைகளுக்கு காரணமாக உள்ளன. ஏப்ரல் மாத துவக்கமே அதாவது 1-ம்- தேதி வங்கிகளுக்கு விடுமுறை நாளாக தான் துவங்குகிறது. வணிகளின் முழுவருட கணக்கு மூடப்படுவதால் இன்று விடுமுறை அதேசமயம் மீதமுள்ளவை வழக்கமான விடுமுறை நாட்கள்.


ஏப்ரல் 2 ஆம் தேதி கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகள் நாளையும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் புனித வெள்ளிக்கு சில மாநிலங்கள் விடுமுறை அளிக்கவில்லை. எனவே இந்த விடுமுறை இல்லாத மாநிலங்களில் இருக்கும் சில வங்கிகள் வேலை செய்யும். அதன் பின் ஏப்ரல் 3-ஆம் தேதி வங்கிகளுக்கு வேலை நாள் என்றாலும் கூட அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் வங்கிகள் மூடப்படும். ஏனென்றால் அன்று வார விடுமுறையான ஞாயிற்று கிழமை ஆகும். ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் நம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 பின்னர் பிஜு விழா / போஹாக் பிஹு / சீரோபா / டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு உள்ளிட்டவை காரணமாக பல மாநிலங்களில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை  நாளாகும். ஏப்ரல் 15 - இமாச்சல தினம் / பெங்காலி புத்தாண்டு தினம் காரணமாக அம்மாநில வங்கிகளுக்கு விடுமுறை. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 21 ராம் நவ்மி / காரியா பூஜை காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாள்.


எனினும் வங்கி விடுமுறைகள் பல மாநிலங்களில் வேறுபடுகின்றன, அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் சில சந்தர்ப்பங்களின் அறிவிப்பை பொறுத்து இவற்றில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அதே போல ஏப்ரல் 10 மற்றும் 24-ம் தேதிகளில் மாதத்தின் இரண்டாது மற்றும் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

வாக்கு பதிவு முடிந்த பின் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் மற்றும் ஆவணங்கள்...



>>> FORMS AND DOCUMENTS TO BE HANDED OVER TO ZONAL OFFICER - CLICK HERE TO DOWNLOAD...


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - ஏப்ரல் 2021 - தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்...

 Tamilnadu Legislative Assembly Election - April 2021 - Rates of Remuneration Payable to Polling / Counting Personnel and others drafted for the Election duty...


Election Duty Remunerations:

PRO: Rs.1700

PO1, PO2, PO3 : Rs.1300.

>>> Click here to Download Chief Electoral Officer Letter...


இன்றைய (02-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



 மேஷம்

ஏப்ரல் 02, 2021



மனதில் தேவையற்ற சிறு குழப்பங்கள் ஏற்படும். எண்ணிய காரியங்கள் சிறிது காலதாமதத்திற்கு பின்பு நடைபெறும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : குழப்பமான நாள்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 02, 2021



குடும்பத்தில் உறவினர்களின் வருகை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி ஏற்படும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் தீரும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : குழப்பங்கள் தீரும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 02, 2021



செயல்பாடுகளில் சிறு தடுமாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் லாபம் மேம்படும்.

ஆசிரியர்களின் ஆலோசனைகள்படி செயல்படுவதால் மேன்மை ஏற்படும். புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : தடுமாற்றமான நாள்.


திருவாதிரை : லாபம் மேம்படும்.


புனர்பூசம் : சாதகமான நாள். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 02, 2021



நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான எண்ணம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : உயர்வான நாள்.


பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 02, 2021



பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருக்கும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உறவுகளிடம் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : நிதானம் வேண்டும்.


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திரம் : மனக்கசப்புகள் நீங்கும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 02, 2021



மனோதைரியம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் வேண்டும். சிக்கலான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் செய்யும் மாற்றங்களால் கீர்த்தி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : மனோதைரியம் அதிகரிக்கும்.


அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்


சித்திரை : திருப்தியான நாள். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 02, 2021



சந்தேக எண்ணங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்வது நல்லது. எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வழக்கு தொடர்பான பணியில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் நிதானப்போக்கை கையாளவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : பணவரவுகள் கிடைக்கும்.


சுவாதி : ஆதரவான நாள்.


விசாகம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 02, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழிலில் புதிய அணுகுமுறையால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் உயரும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : உற்சாகம் பிறக்கும்.


அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 02, 2021



எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும், உதவிகளும் கிடைக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் லாபம் மேம்படும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : செயல்திறன் அதிகரிக்கும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : கலகலப்பான நாள். 

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 02, 2021



மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். சாகோதரர்களின் வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : உற்சாகமான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : எதிர்ப்புகள் அகலும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 02, 2021



இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் அறிவுத்திறமைகள் வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை



அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : பிரச்சனைகள் குறையும்.


பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 02, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். பயணங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களால் சாதகமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : புரிதல் ஏற்படும்.

---------------------------------------


சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%இல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

 



பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு...

 





மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.04.2021...

 மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021 காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2021 மாலை 7 மணி வரை.



https://www.kvsonlineadmission.kvs.gov.in 


என்ற வலைதளத்திலும் மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள்   


https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ 


என்ற URL google play store ன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


மேலும் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 8லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் OBC- NCL எனும் கோட்டாவிலும் ,ஒரே பெண்குழந்தை மட்டும் உள்ளவர்கள் SGC எனும் கோட்டாவிலும் விண்ணப்பிக்கலாம். RTE எனப்படும் கட்டாய கல்வி சட்டப்படி கோட்டாவில் விண்ணப்பிக்கும் மேலும் சீட் கிடைக்கும் பட்சத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம் ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பகிருங்கள் யாருக்கேனும் உபயோகமாகும்.


மேலும் இரண்டாம் வகுப்பு முதல் 08.04.2021 காலை 8 மணிமுதல் 15.04.2021 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


>>> கேந்திரிய வித்யாலயா  - Guidelines for Admissions...


>>> கேந்திரிய வித்யாலயா பள்ளியில் (KVS) RTE - கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கை...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chief Minister directs General Transfer Counseling for government college teachers to be held transparently by 25.11.2024

  அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -  25.11.2024க்குள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த முதலமைச்சர் உத...