ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் - தமிழக அரசு
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, வளசரவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:
கொரோனா தொற்றால், சென்னையில், 18 ஆயிரத்து, 673 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 49 ஆயிரத்து, 985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில், 81 ஆயிரத்து, 871; 'கோவிட் கேர்' மையங்களில், 28 ஆயிரத்து, 95 படுக்கைகள் என, தமிழகத்தில், மொத்தமாக, 81 ஆயிரத்து, 871 படுக்கைகள் உள்ளன.
தற்போது, 6,517 வென்டிலேட்டர்களும்; 1 லட்சத்து, 49 ஆயிரத்து, 822, 'ரெம்டெசிவிர்' மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்திற்கு, 54 லட்சத்து, 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 40 லட்சத்து, 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா விதிமீறிலில் ஈடுபட்ட, 2.39 லட்சம் பேரிடம், 5.07 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் வேகம் படிப்படியாக உயரும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
இயல்பாக உள்ளது என்ற எண்ணத்தில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை நிறுவனங்கள் பின்பற்றுவது நல்லது. பொதுமக்கள், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்; பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மஹாராஷ்டிரா மாநிலம் போன்ற சூழல் தமிழகத்தில் இல்லை. ஊரடங்கு போடுவது குறித்து, அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். தமிழகம் முழுதும், 3,766 அரசு தடுப்பூசி மையம் உட்பட, 4,795 மையங்கள் உள்ளன. முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது; ஆனால், பாதிப்பு குறைவாக உள்ளது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :
கொரோனா பரவலால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது . எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன் விவரங்களை வாங்கி வைத்து , பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர் .
Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai. Phone: 022-22820427; Fax: 022-22820411 Recruitment of Officers/Clerks on Regular/Contract Basis Applications are invited from''
Indian citizens for the following posts: Sr.no. Post Grade Vacancy Advertisement No.
1. Chief Ethics Officer Contractual 1 CRPD/SCO/2021-22/8
2. Advisor (Fraud Risk Management) Contractual
3. Manager (Risk Management) MMGS-III 1
4 Manager (Credit analyst) MMGS-III 2
5. Senior Special Executive (Compliance) Contractual 1
6. Senior Special Executive (Strategy-TMG) Contractual 1 CRPD/SCO/2021-22/1
7. Senior Special Executive -(Global Trade) Contractual 1
8. Senior Executive (Retail & Subsidiaries) Contractual 1
9. Senior Executive (Finance) Contractual 1
10. Senior Executive (Marketing) Contractual
11. Deputy Chief Technology Officer Contractual 1 CRPD/SCO/2021-22/2
12. Manager (History) MMGS-INI 1 CRPD/SCO/2021-22/3
13. Executive (Document Preservation Archives) Contractual 1
14. Pharmacist Clerk 67 CRPD/SCO/2021-22/4
15. Data Analyst MMGS-10 8 CRPD/SCO/2021-22/5
16. Manager (Credit Analyst) MMGS-III 45
17. Manager (Job Family & Succession Planning) MMGS-111 1
18. Manager (Remittances) MMGS-Ili 1
19. Dy. Manager (Marketing - Financial Institution) MMGS-11 1 CRPD/SCO/2021-22/6 20. 20 Dy. Manager (Chartered Accountant) MMGS-11 6
21. Dy, Manager (Anytime Channel) MMGS-11 2
22. Dy. Manager (Strategie Training) MMGS-10 1 CRPD/SCO/2021-22/7
Eligibility criteria (age, qualification, experience, etc.), requisite fees and other details are available, under the respective detailed advertisements mentioned above, on Bank's website https://bank.sbi/web/careers OR https://www.sbi.co.in/web/careers along with a link for online
submission of application as well as online payment of application fee. Candidates are advised to go through the detailed advertisement so as to ensure their eligibility and other details before applying and remitting fees.
• Date For Filing Online Application & Payment of Fees: 13.04.2021 To 03.05.2021 For any query, please write to us through link "CONTACT US" - "Post Your Query" which is available on Bank's website
(URL- https://bank.sbi/careers/psq.htm?action-pquery OR https://sbi.co.in/careers/psq.htm?action-pquery)
Place: Mumbai General Manager Date: 13-04-2021 (CRPD)
மேஷம்
ஏப்ரல் 15, 2021
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : பொருளாதாரம் மேம்படும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 15, 2021
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 15, 2021
திட்டமிட்ட சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை தொடங்குவீர்கள். சபை உறுப்பினர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 15, 2021
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் ஈடேறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 15, 2021
மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : செயல்திறன் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 15, 2021
மனதில் தோன்றும் விசித்திரமான செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை அலைச்சல்களுக்கு பின்பு விற்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகளை ஏற்பீர்கள்.
சித்திரை : இழுபறிகள் அகலும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 15, 2021
உங்களிடம் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சகம்
ஏப்ரல் 15, 2021
வியாபார ரீதியாக சில பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 15, 2021
நெருக்கமானவர்களுக்காக சில செலவுகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : மனம் மகிழ்வீர்கள்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 15, 2021
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மனவருத்தங்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 15, 2021
பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்களுக்கிடையே மரியாதைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.
சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பாதிப்புகள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 15, 2021
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் விழிப்புணர்வு வேண்டும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...