கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் Awareness on “ Adolescent Mental Health ” குறித்த முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...

 அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட Google Link- ல் Awareness on “ Adolescent Mental Health ” among school teachers of Kanniyakumari district என்ற தலைப்பின் கீழ் உள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 16.04.2021 மாலை 04.00 மணிக்குள் விடையளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 8 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


Google Link : 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMXAqKtsTfMQ4Px3mK_RLiiWnfd-Bh8CV2D1npPng1QN_89A/viewform?usp=sf_link




மாணவ/ மாணவியரின் தந்தை / தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, நிதியுதவி ரூ.50000/- (அ) ரூ.75000/ வழங்கும் திட்டம் - நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் விரிவான விவரங்கள் - CEO செயல்முறைகள்...

 திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

ந.க. எண்: 6539/ இ2/ 2020,  நாள்: 15/04/2021 



பொருள் 

அரசு /அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வரும் முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.50000/- அல்லது ரூ.75000/ வழங்கும் திட்டம் - நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் விரிவான விவரங்கள் - கோருதல் சார்பு 


 பார்வை: 

1.தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 020247/ கே3/ 2018 , நாள்: 13-10-2020...

 

2.திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள்

_______


>>> திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண்: 6539/ இ2/ 2020,  நாள்: 15/04/2021...


>>> பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – அரசாணை மற்றும் விண்ணப்பப் படிவம்...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.04.2021 (சனி)...

 


🌹நாம் சிரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி சிரிப்பே வரவில்லையென்றாலும் சிரிக்க வேண்டும்.

ஆனால் நாம் அழ வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி அழுகையே வந்தாலும் அழக்கூடாது.!

🌹🌹பாதுகாக்கப்பட வேண்டியது பணத்தை மட்டும் அல்ல.

பாசமான உறவுகளையும் தான்.

இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்.

நிலைப்பதும் கஷ்டம்.!!

🌹🌹🌹மனிதன் இறுதியாக இறப்பதற்கு

இடையில் மனதால் பலமுறை இறந்து விடுகிறான். 

சில நேரம் சில மனிதர்களால்.

சில நேரம் சில மாற்றங்களால்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⚫⚫நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.

மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் 1987 ஆம் ஆண்டு விவேக் அறிமுகம் ஆனார்.

சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் விவேக்.

சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கிய நடிகர் விவேக், மரக்கன்றுகள் நடுவதை(Greenkalam) வலியுறுத்தி வந்தார்.

🌈🌈ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை விட  கோரிக்கை 

🌈🌈'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

🌈🌈தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

🌈🌈வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

🌈🌈கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் முக்கிய விஷயங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் இந்த கல்வியாண்டாவது நடைமுறைக்கு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி

🌈🌈தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

🌈🌈12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை.

செய்முறை தேர்வு இருப்பின், அந்த பிரிவு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்.

-தமிழக பள்ளிக்கல்வி துறை.

🌈🌈திருச்சியில் பிளஸ் 2 முதல் நாள் செய்முறைத் தேர்வில் 317 பேர் பங்கேற்கவில்லை.

🌈🌈கேரளாவில் திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் - தலைமை செயலாளர் அறிவிப்பு.

🌈🌈+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே.

🌈🌈அண்ணா பல்கலை அரியர் தேர்வுகள் ஏப்ரல் 2021 – அட்டவணை வெளியீடு

🌈🌈புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு

🌈🌈பள்ளிக்கல்வி: முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள்-ஆய்வு - தன்பதிவேடுகள் மற்றும்  தொடர்புடைய பிற பதிவேடுகளை பராமரித்தல்- ஆவணங்களையும் பதிவேடுகளையும் பராமரித்தல்- விரிவான அறிவுரைகள்- வழங்குதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புகிறது 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகங்களில் சம்பந்தமில்லாதவர்கள் நுழைகிறார்கள் 

பொன்முடி திமுக

🌈🌈வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சி முகவர்களுக்கு 29 தேதி கொரோனா பரிசோரனை.

சென்னை மாநகராட்சி திட்டம்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்.

இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை படி முடிவு.

🌈🌈வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. 

வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் என திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு.                                                                          

🌈🌈கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

🌈🌈மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது

🌈🌈மீண்டும் 'ஈ.வே.ரா பெரியார் சாலை' என பெயர் மாற்றம்.

👉சென்னையில் சர்ச்சைக்குள்ளான 'கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை' மீண்டும் 'பெரியார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🌈🌈இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

🌈🌈உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

🌈🌈ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்

-ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

🌈🌈தமிழகத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுபிற்பகலில் ஆலோசனை.

🌈🌈கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெப்பம் இல்லாத அடையாள அட்டைகளுடன் இருக்கும் ஓப்பந்த பணியாளர்களால் சந்தேகம். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கார்த்திக்  புகார் மனு.

🌈🌈ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,520-க்கு விற்பனை

🌈🌈வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌈🌈ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைபடம் வெளியாவதற்கு தடை இல்லை.

தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

🌈🌈கொரோனா பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற சுற்றலா தளமான தாஜ்மஹாலை மே 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு.

🌈🌈ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வர ஏதுவாக உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌈🌈ஐந்து மாநில தேர்தல்களில் பணம், பரிசு பொருட்கள்,  மது உள்ளிட்டவைகள் பறிமுதல் 

446 கோடியுடன் முதல் இடத்தை பிடித்தது தமிழ்நாடு. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். 

கடந்த தேர்தலில் 130 கோடி மட்டுமே பறிமுதல்.

🌈🌈கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலை கட்டிடவியல் துறை ஆய்வு செய்யும் எனவும்,

கூடுதல் செலவினங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரரிடம் வசூலிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிக்கை.

🌈🌈கோவை வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு.

15.62 கோடி ரூபாய் வரை நகராட்சி பணத்தை விடுவித்து கையாடல் என புகார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் கடிதம்...

 


>>> பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 023447/ என்2/ இ2/ 2021, நாள்: 12-04-2021...


>>>  தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 05511/ கே4/ 2021, நாள்: 09-04-2021...


இன்றைய (17-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஏப்ரல் 17, 2021



கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பலவிதமான எண்ணங்களினால் மனதில் குழப்பமான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.


பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


கிருத்திகை : அனுகூலமான நாள். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 17, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் விபரீதத்தை ஏற்படுத்தும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.


ரோகிணி : பேச்சுக்களில் கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 17, 2021



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின்போது உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பொருள் வரவுகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவாதிரை : செயல்பாடுகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 17, 2021



கலை நுணுக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடும். 

மருமகனிடம் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூசம் : இடமாற்றங்கள் நேரிடும். 


ஆயில்யம் : வாக்குவாதங்கள் மறையும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 17, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் எண்ணிய விதத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மற்றும் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் :  மேன்மை உண்டாகும். 


உத்திரம் : ஆதாயமான நாள்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 17, 2021



அரசு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : எண்ணங்கள் நிறைவேறும். 


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : நிதானம் வேண்டும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 17, 2021



புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


சுவாதி : அனுபவம் உண்டாகும். 


விசாகம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 17, 2021



உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கையை பற்றி பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் சில மனக்கசப்புகள் நேரிடும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : காலதாமதம் ஏற்படும்.


அனுஷம் : மனக்கசப்புகள் நேரிடும்.


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 17, 2021



உடனிருப்பவர்களின் தன்மைகளை உணர்ந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திராடம் : வாக்குவாதங்கள் மறையும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 17, 2021



சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனத்தெளிவை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


திருவோணம் : விவேகம் வேண்டும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 17, 2021



தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துப்பிரிவினைகள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 


சதயம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 17, 2021



மனம் திறந்து பேசுவதால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் தெளிவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுகளால் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள். 


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------


இன்றைய (16-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 16, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பரணி : காலதாமதம் அகலும்.


கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 16, 2021



மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை பொறுமையுடன் வெளிப்படுத்தினால் வெற்றி அடைவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : வேகம் அதிகரிக்கும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 16, 2021



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கனவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : குழப்பங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 16, 2021



இணைய வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் எதிர்காலம் பற்றிய குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : சிந்தனைகள் தோன்றும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 16, 2021



உலகியல் நடவடிக்கைகள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : சாதகமான நாள்.


பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 16, 2021



ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.


அஸ்தம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


சித்திரை : முடிவுகளை எடுப்பீர்கள்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 16, 2021



சிலருக்கு எதிர்பாராத உத்தியோக மாற்றம் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பதற்றமான மனநிலை ஏற்பட்டு மறையும். தூக்கமின்மையால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழலும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



சித்திரை : மாற்றம் உண்டாகும்.


சுவாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.


விசாகம் : நெருக்கடியான நாள். 

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 16, 2021



உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.


கேட்டை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 16, 2021



மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். கடன் மற்றும் வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : தெளிவு உண்டாகும்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 16, 2021



வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கற்ற கலைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 16, 2021



தாய்மாமன் வழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகளை அடைவீர்கள். மனதில் கற்பனைத்திறன் மேம்படும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில கடன் உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 16, 2021



முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வீர தீரமான செயல்களை செய்து அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : வேகம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல் விற்பனை தொடக்கம் - விலைப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது...

 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.



இதுகுறித்து பல்கலைகழக துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்தது:


கடந்த செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் தமிழ் பல்கலைக்கழக நிறுவன நாளையொட்டி நடைபெற்ற சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனையில் ரூ.19.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்கப்பட்டன. தமிழக அரசின் ரூ. 2 கோடி நிதி உதவியில் மறு அச்சுத் திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு அச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.



தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை இணைய வழியில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.


தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை மே மாதம் 14-ஆம் தேதி வரை தொடரும் என்றார் துணைவேந்தர்.


இவ்விழாவில் பதிப்புத் துறை முன்னாள் இயக்குநர் ஆறு. இராமநாதன், பதிவாளர் (பொறுப்பு) கு. சின்னப்பன், பதிப்புத் துறை இயக்குனர் (பொறுப்பு) தியாகராஜன், விற்பனையாளர் மு. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


>>> புத்தக விலைப் பட்டியல் - இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...