கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (17-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஏப்ரல் 17, 2021



கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பலவிதமான எண்ணங்களினால் மனதில் குழப்பமான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.


பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


கிருத்திகை : அனுகூலமான நாள். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 17, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் விபரீதத்தை ஏற்படுத்தும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.


ரோகிணி : பேச்சுக்களில் கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 17, 2021



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின்போது உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பொருள் வரவுகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவாதிரை : செயல்பாடுகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 17, 2021



கலை நுணுக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடும். 

மருமகனிடம் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூசம் : இடமாற்றங்கள் நேரிடும். 


ஆயில்யம் : வாக்குவாதங்கள் மறையும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 17, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் எண்ணிய விதத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மற்றும் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் :  மேன்மை உண்டாகும். 


உத்திரம் : ஆதாயமான நாள்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 17, 2021



அரசு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : எண்ணங்கள் நிறைவேறும். 


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : நிதானம் வேண்டும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 17, 2021



புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


சுவாதி : அனுபவம் உண்டாகும். 


விசாகம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 17, 2021



உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கையை பற்றி பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் சில மனக்கசப்புகள் நேரிடும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : காலதாமதம் ஏற்படும்.


அனுஷம் : மனக்கசப்புகள் நேரிடும்.


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 17, 2021



உடனிருப்பவர்களின் தன்மைகளை உணர்ந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திராடம் : வாக்குவாதங்கள் மறையும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 17, 2021



சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனத்தெளிவை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


திருவோணம் : விவேகம் வேண்டும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 17, 2021



தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துப்பிரிவினைகள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 


சதயம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 17, 2021



மனம் திறந்து பேசுவதால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் தெளிவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுகளால் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள். 


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...