கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

 ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு - எந்த பகுதிகளுக்கு முன்னுரிமை? - முதன்மை கல்வி அலுவலர்(CEO)களுக்கு உத்தரவு...

 


ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்‌ கூறியிருப்பதாவது: 




ஒருங்‌கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022ஆம்‌ ஆண்டுக்கான திட்டமிடலில்‌ ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு தேவையான முன்மொழிவுகள்‌ மத்திய அரசால் கோரப்‌பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்‌டமைப்பிற்கு மாவட்‌டங்களில்‌ இருந்து கருத்துருக்கள்‌ பெறப்‌பட்டு தங்கள்‌ நிலையில்‌ ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள்‌ மற்றும்‌ இணைப்புகளுடன்‌ மத்திய அரசுக்கு முன்மொழிவுகள்‌ அனுப்பிவைக்க வேண்டும்‌. 





இடம் தேர்வு செய்யும்‌ போது மலைப் பகுதிகள்‌ மற்றும்‌ போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும்‌, விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்‌. 

இவ்‌வாறு சுற்றறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான தகவல்கள்...


>>> PF கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்த PDF File தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (21-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



 மேஷம்

ஏப்ரல் 21, 2021



தாயின் மீது அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : அன்பு அதிகரிக்கும்.


பரணி : அனுகூலமான நாள்.


கிருத்திகை : நிதானம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 21, 2021



பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். தூக்கமின்மையினால் ஆரோக்கியம் குறைவுபடும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை உணர்ந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : மேன்மையான நாள்.


ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 21, 2021



நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். சுயதொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 21, 2021



வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூசம் : திருப்தியான நாள்.


ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 21, 2021



தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தர்ம ஸ்தாபனங்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


பூரம் : இடமாற்றம் உண்டாகும்.


உத்திரம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 21, 2021



உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருங்கியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : பொறுமை வேண்டும்.


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 21, 2021



முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியமாகும். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


சுவாதி : நிதானம் வேண்டும்.


விசாகம் : பணவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 21, 2021



கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



விசாகம் : அனுகூலமான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 21, 2021



எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பெரியவர்களுடன் வாக்குவாதங்கள் நேரிடும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : வாக்குவாதங்கள் நேரிடும்.


பூராடம் : செலவுகள் உண்டாகும்.


உத்திராடம் : சோர்வான நாள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 21, 2021



புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 21, 2021



தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகள் மாற்றமான சூழலை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.


சதயம் : கலகலப்பான நாள்.


பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 21, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை மேலோங்கும்.


ரேவதி : தனவரவுகள் உண்டாகும்.

---------------------------------------


கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு...

 கொரோனா போர் வீரர்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது. 




 அந்தவகையில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள்.


 

இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தை தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர். 



 இப்படி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.


ரூ.50 லட்சம்

பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 


இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.


 

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதில் 3-வது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. 



 எனவே 24-ந்தேதிக்குப்பிறகு புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்து உள்ளது. இதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


 

சுகாதார அமைச்சகம் அறிவிப்பு#  இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. 



கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்த திட்டம் ஒரு முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது. கொரோனா போர்வீரர்களின் இந்த காப்பீட்டு திட்டம் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக்கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அதைத்தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கருணை அடிப்படையில் 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை...



 கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment) 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021...


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021 & அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 26-02-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இரவு நேர ஊரடங்கு - திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரையிலிருந்து எந்த ஊருக்கு கடைசி பஸ் எப்பொழுது?



20-04-2021 முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால், திருச்சி மத்திய மற்றும் சத்திரம், திண்டுக்கல், மதுரையிலிருந்து பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊருக்கு கடைசி பஸ்கள் இயக்கம் என்பது குறித்த விவரம்...


>>> கடைசி பஸ்கள் இயக்க நேரம் குறித்த விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் - அரசு வட்டாரங்கள் தகவல்...

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.



தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிகமாக பரவும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளில் நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்பட முடியாது என்பதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற முடியாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் அவர்களுக்கு மே மாதம் 3 முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வு மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.


ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். எனவே தொற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...