கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 30, 2021



தீர்ப்புகளில் சாதகமான எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 30, 2021



புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.


ரோகிணி : உறவுநிலை மேம்படும். 


மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 30, 2021



விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். பணியில் எடுத்த செயலை முடிப்பதன் மூலம் செல்வாக்கு உயரும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள். 


திருவாதிரை : செல்வாக்கு உயரும். 


புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 30, 2021



சமூகச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். நிர்வாகத்தில் மாற்றங்கள் உண்டாகும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். 


பூசம் : மாற்றங்கள் உண்டாகும். 


ஆயில்யம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 30, 2021



மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் லாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : விமர்சனங்கள் மறையும்.


பூரம் : லாபகரமான நாள். 


உத்திரம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 30, 2021



அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : ஆதாயம் உண்டாகும். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


சித்திரை : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 30, 2021



உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


சுவாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 30, 2021



கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். கடினமான வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : ஆதரவான நாள். 


அனுஷம் : மனம் மகிழ்வீர்கள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 30, 2021



தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவிகள் கிடைக்கும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 30, 2021



போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு உயரும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : வெற்றிகரமான நாள். 


திருவோணம் : லாபம் மேம்படும். 


அவிட்டம் : செல்வாக்கு உயரும். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 30, 2021



சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். அநாவசியமான செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : திருப்திகரமான நாள்.


சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 30, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 


உத்திரட்டாதி : தாமதங்கள் உண்டாகும். 


ரேவதி : லாபகரமான நாள்.

---------------------------------------


வருமான வரிச் சலுகை திட்டம் - அவகாசம் நீட்டிப்பு...


 வருமான வரி வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான, 'விவாத் சி விஸ்வாஸ்' திட்டம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 


வருமான வரி மதிப்பீடு, அபராதம், வட்டி ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, 'விவாத் சி விஸ்வாஸ்' எனப்படும், சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.



இந்த திட்டத்தில், மதிப்பீடு செய்யப்பட்ட வருமான வரியை செலுத்துவோருக்கு அபராதம், வட்டி, காலதாமத கட்டணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அதனால், இந்த திட்டம், வருமான வரி செலுத்துவோரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 



  ஏராளமான வழக்குகளுக்கு துறை ரீதியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தில், 54 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இம்மாதம், 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த 



இத்திட்டத்தை, கொரோனா காரணமாக, நீட்டிக்கக் கோரி, வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, ஜூன், 30ம் தேதி வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு...

 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது...

































ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் - கணிப்பு!


ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-170


அதிமுக கூட்டணி - 58-68


அமமுக கூட்டணி - 4-6


ம.நீ.ம கூட்டணி - 0-2


சி வோட்டர் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-172


அதிமுக கூட்டணி - 58-70


அமமுக கூட்டணி - 0-4


ம.நீ.ம கூட்டணி - 0


மற்றவை - 0


India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்:

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 175-195


அதிமுக கூட்டணி - 38-54


அமமுக கூட்டணி - 1-2


ம.நீ.ம கூட்டணி - 0-2


மற்றவை - 0


தொடர்ந்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது...


நன்றி : விகடன் இணையதளம்


ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் தொடர்ந்து பெற்றுத்தர ₹ 2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் & இணை மறுவாழ்வு அலுவலர் கைது...

 


பத்தாம் வகுப்பு முடிவு தெரியாமலேயே பிளஸ்-1 சேர்க்கைக்கு ஆர்வம் காட்டும் தனியார் பள்ளிகள்...

 தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து இதுவரை எதுவித முடிவும் வெளியாகவில்லை. இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:

 தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் செய்முறைத் தேர்வு நிறைவு செய்யப்பட்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றபடி பத்தாம் வகுப்பு உட்பட பிற வகுப்பினர் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடந்ததால் அந்த மதிப்பெண்கள் மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் அந்த தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. மேலும் மீண்டும் பரவி வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்தும் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அழகாபுரம் சூரமங்கலம் நெத்திமேடு அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முற்றிலுமாக முடிந்து விட்டது. ஒரு சில பள்ளிகளில் வகுப்புகள் கூட நடந்து வருகிறது. அரசு எவ்வித வழிகாட்டுதலும் வழங்காத நிலையில் இவர்கள் தன்னிச்சையாகவும் , விதிகளை மீறி மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை வசூலிக்கவே, தற்போது  சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கைக்கு கடும் போட்டி என காரணம் காட்டி எளிதாக மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைப்பதே சிறந்தது. எனவே இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.



கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.



பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.



ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.



எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.



அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.


இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் - உயர் நீதிமன்றம்...

 உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


 

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.


 

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.



இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.


 

இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதி ஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல் 2020 வரை பணிவரன்முறை செய்யக்கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


 

இந்த வழக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்த மனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என தொடக்கக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.


 

மேலும், “மனுதாரர் தனது மனு, மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக வழங்க வேண்டும். அவரது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் அல்லது பதிவு தபால் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஒருவேளை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும் நேரிடும்” எனவும் எச்சரித்தார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...