கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேர்வு...

 தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.



 ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலையில் துவங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.


 கூட்டத்தின் முடிவில் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


✍🏻✍🏻 எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. அப்பாவு அவர்கள் தேர்வு...

 


🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. அப்பாவு அவர்கள் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்


தமிழக சட்டமன்றத்தில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!


தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கு. பிச்சாண்டி அவர்கள் 

போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்!


*தமிழக சட்டப்பேரவையில் கொறாடாவாக ஏற்கனவே மாண்புமிகு. கோவி.செழியன் 


அவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மருந்து - கொரோனா பாதிப்பை குணப்படுத்தும்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...

 



இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும். 




2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2DG மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் அதிகளவில் விநியோகிக்க எளிதானது. இது வைரஸ் உற்பத்தியை கட்டுப்படுத்தி, உடலில் ஆற்றலை ஊக்குவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.


உங்கள் பகுதியில் தடுப்பூசி போடப்படும் நாள் குறித்த தகவல்கள் அறிய எளிய வழிமுறை...

 உங்கள் பகுதியில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் நாள் குறித்த தகவல்கள் அறிய எளிய வழிமுறை...



+919013151515 - இந்த எண்ணை உங்கள் தொலைபேசியில் சேமித்து, அதே எண்ணைப் பயன்படுத்தி வாட்சப் செயலிக்கு செல்லுங்கள்..  உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்... தற்போதைய தடுப்பூசி இடங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்...


மேலும் தடுப்பூசிக்கு நமது பெயரை பதிவு செய்தும் கொள்ளலாம்..


இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...










மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை...

 தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 




அதன்படி,  10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தொற்றை கட்டுப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை. 




ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இபாஸ் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போக்குரவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காகவும், திருமணத்திற்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறப்பு மற்றும் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காகவும் மட்டுமே வாகனங்களில் பயணிக்க போலீசார் அனுமதிப்பார்கள். அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் முதல்வர் இன்று துவங்கி வைத்தார்- இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்...

 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்  கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு   உள்ளிட்ட 5 முக்கிய அரசாணைகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.



அதில், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த டோக்கனில் கடையின் எண், பெயர், அட்டைத்தாரர் பெயர், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.


இந்த டோக்கனை வழங்கி 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

நீதித்துறை ஆட்சேர்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு & வயது வரம்பு 45லிருந்து 50 ஆக உயர்வு...



 நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது & மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 45 வயதிலிருந்து 50 வயது ஆக உயர்த்தப்பட்டுள்ளது...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...