கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.05.2021(செவ்வாய்)...

 


🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.

நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.

அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!

🌹🌹தொந்தரவு செய்யும் அன்பு ஒருபோதும் பொய்யாக இருக்காது.

ஆனால் அதுதான் யாருக்கும் புரிவது இல்லை.!!

🌹🌹🌹வேஷம் போடும் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது.

மதி கெட்ட மனதுக்குத் தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேஷம் என்று.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀 நம் நெஞ்சில் வாழும் பாவலர் ஐயா அவர்களுக்கு எதிர்வரும் 14.05.2021அன்று முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு 

மாவட்ட,மாநகர,நகர,ஒன்றிய,சரக மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தி புகழ் வணக்கம் செலுத்திடுமாறும் சக்திக்கு ஏற்ற வகையினில் நலத்திட்ட உதவிப் பொருள்களை கொரோனா தடுப்பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் இனக்காவலர்,

பாவலர் ஐயா அவர்களின் நோக்கம்- இலட்சியம் நெஞ்சினில் தாங்கிப் பயணிப்போம்!

கொரோனாக் காலத்திய ஊரடங்கு விதிகளை 

கவனத்தில் -கணக்கில் கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  கடைப்பிடிப்போம்!

வாழ்க !

பாவலர் புகழ்!

🌹👉தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு 2021 மே மாதம் ஊதியத்தில் இருந்து  குறைந்தபட்சமாக ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவது என்று முடிவெடுத்து அறிவிக்கிறது-

முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் பொதுச்செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

🎀🎀பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்

👉மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

👉முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை

👉நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

🎀🎀ஜேக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - பத்திரிக்கைச் செய்தி 10.05.2021

🎀🎀G.O.(Ms) No.19 - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

இன்றைய (11-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 11, 2021



கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.


பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


கிருத்திகை : கலகலப்பான நாள்.

---------------------------------------




ரிஷபம்

மே 11, 2021



உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : மேன்மையான நாள்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------


சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேர்வு...

 தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.



 ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலையில் துவங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.


 கூட்டத்தின் முடிவில் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


✍🏻✍🏻 எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வுசெய்ய வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. அப்பாவு அவர்கள் தேர்வு...

 


🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️🏛️


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. அப்பாவு அவர்கள் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்


தமிழக சட்டமன்றத்தில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!


தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கு. பிச்சாண்டி அவர்கள் 

போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்!


*தமிழக சட்டப்பேரவையில் கொறாடாவாக ஏற்கனவே மாண்புமிகு. கோவி.செழியன் 


அவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மருந்து - கொரோனா பாதிப்பை குணப்படுத்தும்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...

 



இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும். 




2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2DG மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் அதிகளவில் விநியோகிக்க எளிதானது. இது வைரஸ் உற்பத்தியை கட்டுப்படுத்தி, உடலில் ஆற்றலை ஊக்குவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.


உங்கள் பகுதியில் தடுப்பூசி போடப்படும் நாள் குறித்த தகவல்கள் அறிய எளிய வழிமுறை...

 உங்கள் பகுதியில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் நாள் குறித்த தகவல்கள் அறிய எளிய வழிமுறை...



+919013151515 - இந்த எண்ணை உங்கள் தொலைபேசியில் சேமித்து, அதே எண்ணைப் பயன்படுத்தி வாட்சப் செயலிக்கு செல்லுங்கள்..  உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்... தற்போதைய தடுப்பூசி இடங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்...


மேலும் தடுப்பூசிக்கு நமது பெயரை பதிவு செய்தும் கொள்ளலாம்..


இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...










மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை...

 தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 




அதன்படி,  10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தொற்றை கட்டுப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை. 




ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இபாஸ் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போக்குரவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காகவும், திருமணத்திற்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறப்பு மற்றும் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காகவும் மட்டுமே வாகனங்களில் பயணிக்க போலீசார் அனுமதிப்பார்கள். அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...